Pages

Saturday, January 7, 2017

'கடல் தாழைகளை பாதுகாக்க வேண்டும்': காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர் வி. பாலாஜி பேட்டி !

'கடல் தாழைகளைப் பாதுகாக்க வேண்டும்' என கடல்வாழ் உயிரி பாதுகாப்பு அமைப்பின் நிறுவன இயக்குநரும், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவருமான வி. பாலாஜி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்;
கடல் தாழைகள் என்று அழைக்கப்படும் கடல் தாவரங்கள் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் வளர்கின்றன. பதினான்கு வகை கடல் தாழைகள் இதுவரை இங்கு கண்டறியப்பட்டுள்ளன. இவை கடற்கரையிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவு வரையில் வளைந்துள்ளன.  தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 12,400 ஹெக்டர் அளவுக்கு கடல் தாழைகள் வளர்ந்துள்ளன. கடலுக்கு அடியில் “நெல் வயல்” போன்ற தோற்றத்தில் மிகப்பெரிய அளவில் கடல் தாழைகள் வளர்ந்துள்ளன.

இதை போன்ற பரந்த கடல் தாழைகள் நம் கடல் பகுதியில் மட்டுமே உள்ளன. தமிழத்தின் சென்னை முதல் கோடியக்கரை வரையிலும், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் அலைகள் அதிகமாக அடித்து கொண்டே இருப்பதாலும், ஆழமான கடல் பகுதிகளாக இருப்பதாலும் அங்கு கடல் தாழைகள் வளர்வதில்லை.

பலவிதமான மீன்கள், இறால்கள், கணவாய் மீன்கள், நண்டுகள், கடல் குதிரைகள், கடல் பசுக்கள், கடல் அட்டைகள் போன்றவை கடல் தாழைகள் உள்ள இடங்களில் உற்பத்தியாகி வாழ்கின்றன.

கடல் பசுக்கள் உலக அளவில் அழியும் நிலையில் உள்ள விலங்கு பட்டியலில் வைக்கபட்டுள்ளன.  கடல் பசுக்களின் முக்கிய உணவாக கடல் தாழைகள் உள்ளன.

கடலில் அலைகளின் வேகத்தையும், நீரோட்டத்தின் வேகத்தையும் கடல் தாழிகள் குறைக்கும். கடல் தாழைகளின் வேர்கள் கடல் மண்ணின் பிடிமானத்தை அதிகரிப்பதால் மண் அரிப்பு தடுக்கபட்டு கடல் கரைகள் பாதுகாக்கபடுகின்றன.

தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு தேவையான மீன்களை கடல் தாழைகள் உற்பத்தி செய்கின்றன.

எனவே கடல் தாழைகளை பாதுகாப்பதன் மூலம் நம் பகுதிக்கு தேவையான மீன்களை நம் கடல் பகுதியிலே பிடித்து கொள்ளலாம்.  கடல் பசுக்களின் உணவு ஆதாரங்களை பாதுகாக்கலாம்.  இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கடல் தழைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...