Pages

Thursday, January 12, 2017

அதிகரித்து வரும் உடல் பருமன்: உலகளவில் கத்தார், அமெரிக்கா, சவூதிக்கு அடுத்தடுத்து இடங்கள் !

அதிரை நியூஸ்: ஜன-12
இன்று கத்தார், சவுதி நாளை நாமாகவும் இருக்கலாம் என்ற எச்சரிக்கைகாகவே இந்த பொதுவான பதிவு என்றாலும் நமதூர் அதிரையிலும் சகட்டுமேனிக்கு அதிகரித்துவிட்ட மேற்கத்திய மற்றும் அரேபிய உணவு பழக்கத்தை கண்டு நடுங்குவதால் நீங்களும் நம்மவூரான் என்ற கூடுதல் அக்கரையுடன்!

நீ புடுங்கிறதெல்லாம் தேவையில்லாத ஆணி தான் என்ற காமெடி வசனத்திற்கு ஏற்ப அமெரிக்கா போன்ற மேலைநாடுகள் நாகரீக சாயம் பூசி பிற நாட்டு மக்களின் தலையில் கட்டுவதெல்லாம் தீங்கு விளைவிக்கக்கூடியதே. உதாரணத்திற்கு கோக், பெப்சி, பீட்சா, பர்க்கர், கேஎப்சி, ரசாயன உரங்கள், சிகரெட்டுக்கள், அணு உலைகள் என அடுக்கிக் கொண்டு செல்லலாம். அதனடிப்படையில் அரபுநாடுகளின் பெட்ரோலை ஆட்டயப்போட்டுவிட்டு பதிலுக்கு தந்த கேடுகெட்ட பொருட்களின் விளைவாக சவுதி அரேபியாவில் வாழும் மக்கள் தொகையில் மூன்றில் ஒருவர் 'கொளுத்தவர்கள்' என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கின்றது.

1975 ஆம் ஆண்டு அமெரிக்கா சவுதிக்குள் கூடாரமடித்த போது சுமார் 14.2 சதவிகிதமாக இருந்த உடல் பருமன் (Obesity) கொண்டவர்களின் உடல் அளவு மட்டுமல்ல அவர்களின் எண்ணிக்கை அளவின் சதவிகிதமும் தாறுமாறாக 33.5 சதவிகிதமென உயர்ந்துள்ளது.

186 நாடுகளில் சுமார் 19.2 மில்லியன் மக்களிடத்தில் நடத்தப்பட்ட 1,698 ஆய்வறிக்கைகளின் கூட்டுத்தகவலின்படி, மக்கள் விழிப்புணர்வு பெறாவிட்டால் 2025 ஆம் ஆண்டில் உலக மக்களில் ஆண்கள் 18 சதவிகிதமும் பெண்கள் 21 சதவிகிதமும் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பர் என எச்சரிக்கின்றது.

தனக்குத்தானே சகிக்கமுடியாத உடல் தோற்றம் மற்றும் அதனால் ஏற்படும் மன உளச்சலுடன் இதய நோய்கள், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், சோம்பல் போன்ற இலவச நோய்கள் பீடிக்க, உணவியலாளர்கள் வெஜ்தான் குதுப் அவர்களும், விவியன் வெஹ்பே அவர்களும், மருத்துவர் ருவைதா என். இத்ரீஸ் அவர்களும் வளைகுடா நாடுகளில் உடல் பருமன் கொண்டவர்கள் அதிகரிக்க இவையெல்லாம் பிரதான காரணங்கள் என பட்டியலிடுகிறார்கள்,

1. ஆண்டின் பெரும்பான்மையான நாட்களில் நிலவும் 35 டிகிரிக்கு மேற்பட்ட வெப்பநிலை.

2. வாகன வசதிகள்.

3. உடற்பயிற்சி செய்யாமை அல்லது அதற்கான வசதி குறைவுகள், குறிப்பாக பெண்களுக்கு.

4. உணவு பழக்கங்கள் குறிப்பாக அதிக சர்க்கரை, உப்பு, (அஜினோமோட்டோ போன்ற) செயற்கை ருசியூட்டிகளை உட்கொள்ளுதல்.

5. ஹார்மோன் மற்றும் ஆன்டிபயோட்டிக் மருந்துகள் செலுத்தப்பட்ட (மரபணு மாற்றப்பட்ட மற்றும் ரசாயன உரமிடப்பட்ட) விவசாயப் பொருட்கள், மாமிச வகைகள் (பிராய்லர் கோழி போன்றவை).

6. வீட்டு வேலைகளை தான் செய்யாமல் வேலையாட்களையும், இயந்திரங்களை நம்பி இருத்தல்.

7. தொலைக்காட்சிகள் மற்றும் நவீன மின்னனு சாதனங்கள் முன் மணிக்கணக்கில் அமர்ந்திருத்தலுடன் நொறுக்குத் தீனிகளை அசைபோடுதல்.

8. சூப்பர் சைஸ் உணவுகளை காட்டி சுண்டியுழுக்கும் மெக்டொனால்ட், கேஎப்சி, பிட்ஸாஹட் போன்ற துரித உணவகங்களின் கைங்காரியங்கள்.

9. அதிகமாக உட்கொள்ளப்படும் சர்க்கரை உடற்பயிற்சி செய்துவிட்டால் செரித்து வெளியாகிவிடும் என்ற தவறான நம்பிக்கை ஆனால் கார்போஹைட்ரேட்டுகளும் சர்க்கரையும் உடலுக்குள் நுழைந்தவுடன் கொளுப்பாக தங்கிவிடுகின்றன.

10. அளவுக்கு அதிகமாக உட்கொள்ளப்படும் பேரீத்தம் பழங்கள்.

உலகிலேயே குறைவான குண்டு மனிதர்களை கொண்டுள்ள நாடுகளாக வட கொரியாவும், ஜப்பானும் ஆச்சரியமளிக்கின்றன.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...