Pages

Saturday, January 7, 2017

அபுதாபி முனிசிபாலிட்டி வரி விதிப்பால் குடியிருப்போர் விழி பிதுங்கும் சூழல் !

அதிரை நியூஸ்: அபுதாபி, ஜன-07
அபுதாபியில் புதிதாக குடியிருப்பு வாடகை கட்டணத்தின் மதிப்பிலிருந்து 3 சதவிகித கூடுதல் மாநகராட்சி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை 2016 பிப்ரவரி மாதத்திலிருந்து முன் தேதியிடப்பட்டு வசூலிக்கப்படவுள்ளது.

இந்தத் தொகையை மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான சேவைக் கட்டணத்துடன் சேர்த்து கட்ட வேண்டும். புதிய வரிவிதிப்பு அபுதாபி அரசுக்குட்பட்ட அல் அய்ன் மற்றும் (லிவா, கர்பியா, ருவைஸ், டெல்மா, சிலா, கயாத்தி, மிர்பா, மதீனத் ஜாயித் போன்ற மேற்குப்புற பிரதேசங்களுக்கும் பொருந்தும்.

சமீபத்தில் தான் அபுதாபி அரசு குடியிருப்பு வாடகைக் கட்டணத்தில் 5 சதவிகிதம் தள்ளுபடி சலுகை வழங்கியிருந்த நிலையில் தற்போது 3 சதவிகிதம் மாநகராட்சி வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதேபோன்ற மாநகராட்சி வரி துபையில் 5 சதவிகிதமும், ஷார்ஜாவில் 2.5 சதவிகிதமும் ஒவ்வொரு முறையும் வாடகை ஒப்பந்தங்கள் நீட்டிக்கப்படும் போது சேர்த்து வசூலிக்கப்படுகின்றன என்றாலும் அபுதாபி அறிமுகப்படுத்தியுள்ளது போல் சென்றுவிட்ட வருடத்திற்கும் சேர்த்து வசூலிக்கப்படவில்லை. இந்தப் புதிய வரியை கட்டிட உர்மையாளர்கள் செலுத்த வேண்டியதில்லை மாறாக வாடகைக்கு குடியிருப்போர் தான் 'முஹப்பத்'தாக கொடுத்துவிட வேண்டும். (பெண் வீட்டினரின் வலியை புரிந்துகொள்ளும் ஓப்பீட்டுக்காக... நம்ம நாட்ல இப்படித்தான் வரதட்சணையை பெண் வீட்டில் 'முஹப்பத்'தாக கேட்டு வாங்கப்படுகிறது)

கடந்த 2016 ஜனவரியில் தான் அபுதாபி அரசு மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான கட்டணங்களை உயர்த்தியிருந்தது, பெட்ரோலுக்கான மானியமும் ரத்து செய்யப்பட்டது. மேலும் 2018 ஆம் ஆண்டு முதல் மதிப்புக்கூட்டு வரி (VAT) விதிக்கும் திட்டத்தையும் அமல்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றனவாம், இந்த மதிப்புக்கூட்டு வரி நடைமுறைக்கு வரும் ஆண்டில் 12 பில்லியன் திர்ஹமும் அடுத்த ஆண்டில் சுமார் 18 முதல் 20 பில்லியன் திர்ஹமும் கூடுதல் வரி வருவாய் அரசுக்கு கிடைக்கும்.

(பெட்ரோல் விலை வீழ்ச்சியால் வாங்கிய அடியை) எத்தனை நாளைக்குத் தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும்...

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...