Pages

Tuesday, January 10, 2017

வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் !

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக மூலமாக
வழங்கப்படும் உதவித் தொகை திட்டத்தில் வேலையற்றவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் தங்களது கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்ளவும், போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்கவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மைக்கு ரூ.100/-ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.150/-ம், மேனிலை கல்வித்தகுதிக்கு ரூ.200/-ம் பட்டப்படிப்பு கல்வித்தகுதிக்கு ரூ.300/-ம் அரசால் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டம் வேலைவாய்ப்பு துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பத்தாம்வகுப்பு தேர்ச்சியின்மை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மேனிலைக்கல்வி மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித்தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பதிவு செய்து 5 ஆண்டுகள் (31.12.2011) முடிவுற்றிருக்க வேண்டும்.  தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் 31.12.2016 நிலையில் 45 வயதையும், இதர வகுப்பினர் 40 வயதையும் கடந்தவராக இருக்கக் கூடாது.  குடும்ப ஆண்டு வருமானம்
ரூ.50000/-க்குள் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப்படிவம் https://tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்தும், விண்ணபப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தில் பக்கம்-7ல் வருவாய் ஆய்வாளரின் ஒருங்கிணைந்த சான்று, புகைப்படம், மனுதாரர் பெயரில் புதிதாக துவங்கப்பட்ட தேசீயமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் அனைத்து கல்விச்சான்றுகள் ( Transfer Certificate  உட்பட) உடன்  அலுவலக வேலை நாளில் நேரில் சமர்ப்பித்து பயன்பெற தெரிவிக்கப்படுகிறது.

மாற்றுதிறனாளிகளுக்கான தகுதிகள்:
இத்திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அலுவலக பதிவின் காத்திருப்பு காலம் ஒரு ஆண்டு மட்டுமே.  அதாவது 31.12.2016 வரை பதிவு செய்துள்ளவர்கள், பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கும் கீழ் ரூ.600/-ம், மேனிலை கல்வித்தகுதி ரூ.750/-ம், பட்டப்படிப்பு  கல்வித் தகுதிக்கு ரூ.1000/-ம் உயர்த்தப்பட்ட தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் ஆண்டு வருமானத்தில் உச்ச வரம்பு கிடையாது. வருவாய் அலுவலரின் சான்று சமர்ப்பிப்பதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தெரிவிக்கப்பட்டுள்ள தகுதியும் விருப்பமும் உடைய தஞ்சாவூர் மாவட்ட பதிவுதாரர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...