Pages

Monday, January 16, 2017

சினிமா, கச்சேரிகள் சவூதியை பாழ்படுத்திவிடும்: தலைமை இமாம் கடும் எச்சரிக்கை !

அதிரை நியூஸ்: ஜன-16
வெட்கமற்ற (Shameless), ஒழுக்கக்கேடான (Immoral), நாத்திக (Atheistic), அழுகிய (Rotten) சிந்தனைகளை மனித மனதுள் விதைப்பதுடன் அநாச்சாரமான முறையில் ஆண் பெண் கலப்பை ஊக்குவிக்கும் பன்னாட்டு சினிமா மற்றும் மேடை கச்சேரி நிகழ்ச்சிகளை திறந்துவிட்டால் சவுதியின் இஸ்லாமிய கலாச்சாரத்தை சிதைத்துவிடும் என சவுதியின் தலைமை இமாம் ஷேக் அப்துல் அஜீஸ் அல் ஷேக் (Grand Mufti Sheikh Abdulaziz Al Sheikh) அவர்கள் தனது இணையதளம் மூலம் சவுதி அரசின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் அதிகார சபையை கடுமையாக எச்சரித்துள்ளார்.

கடந்த வாரம், சவுதி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் அதிகார சபையின் பொறுப்பாளர் அம்ரு அல் மதானி என்பவர், சவுதி அரசின் தூர நோக்கு மாற்றுப் பொருளாதார திட்டமான 'விஷன் 2030' எனும் திட்டத்தின் கீழ் சில பண்பாட்டு கலாச்சாரங்களை கைவிடவும், பன்னாட்டு சினிமா மற்றும் மேடை கச்சேரிகளுக்கு அனுமதி தரவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறியதை தொடர்ந்து பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா, மேடை கச்சேரிகள் போன்றவைகளுக்கான தடைகள் ஏற்கனவே சவுதியில் அமலில் இருக்கும் நிலையில், இதுபோன்ற அதிகார மையங்களில் அமர்ந்திருப்போர் தீமையை அழித்து நன்மையை கொண்டு வர நாட வேண்டுமேயொழிய ஷைத்தானிய நடவடிக்கைகளுக்கு கதவை திறந்துவிட முயலக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

‘இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.’ (அல்-குர்ஆன் 4:77)

உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்துவிடும். அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும் - எவர்கள் பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல்-குர்ஆன் 16:96)

Sources: Asian News Int'l / Syndigate.info / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...