Pages

Tuesday, January 10, 2017

துபாய், கராமா மெடிக்கல் பிட்னஸ் சென்டர் சேவை கட்டணம் உயர்வு !

அதிரை நியூஸ்: ஜன-10
துபையில் ரெஸிடென்ஸ் விசா அடிப்பதற்கு முன் துபை சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் எக்ஸ்பிரஸ் மெடிக்கல் பிட்னஸ் சென்டர்களில் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம்.

இந்த மெடிக்கல் பிட்னஸ் சென்டர்கள் சோனாப்பூர், முஹைஸ்னா, அல் பர்சா, கராமா ஆகிய பகுதிகளில் செயல்படுகின்றன. புதிதாக துபை ஹெல்த் கேர் சிட்டியிலும் ஒரு பிட்னஸ் சென்டர் 2017 ஜனவரி 4 முதல் துவக்கப்பட்டுள்ள நிலையில் கராமா சென்டரில் மட்டும் நிர்வாக சேவைகள் கட்டணம் என்ற பெயரில் தலா 100 திர்ஹம் உயர்த்தப்பட்டுள்ளது. இதர மெடிக்கல் பிட்னஸ் சென்டர்களில் பழைய கட்டணங்களே இன்னும் நீடிக்கின்றன.

48 மணிநேர மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்கு 430 திர்ஹமும், 34 மணிநேர மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்கு 530 திர்ஹமும், 4 மணிநேர விஐபி சேவைகளுக்கு 750 திர்ஹமும் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இனி மேற்காணும் அனைத்து சேவைகளுக்கும் கூடுதலாக 100 திர்ஹம் சேர்த்து செலுத்த வேண்டும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...