Pages

Wednesday, January 4, 2017

மு.க ஸ்டாலின் செயல்தலைவர் தேர்வையொட்டி அதிரையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம் !

அதிராம்பட்டினம், ஜன-04
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையொட்டி, அதிராம்பட்டினம் திமுகவினர் கட்சி அலுவலகத்தில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து, வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் ஜே. சாகுல் ஹமீது,
பொருளாளர் கோடி முதலி, துணைச்செயலாளர் அன்சர்கான், தில்லை நாதன், மாவட்ட பிரதிநிதி இன்ப நாதன், வார்டு பொறுப்பாளர்கள் முத்து, அஜீஸ், வரிசை முஹம்மது, சைஃபுதீன், சாதிக் மன்ற பொறுப்பாளர் ஜபருல்லா, நாகூரான் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...