Pages

Saturday, January 28, 2017

புதிய உலோகம் கண்டுபிடிப்பு! விஞ்ஞான புரட்சியாக மாறுமா?

அதிரை நியூஸ்: ஜன-28
சுமார் 100 ஆண்டுகளாக விஞ்ஞான உலகம் மிகவும் எதிர்பார்த்திருந்த உலகின் மிகுந்த எடை குறைவான புதிய உருமாற்று உலோகம் ( Metal ) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது, அதாவது ஹைட்ரஜனை இதுவரை வாயுவாகவும், திரவ வடிவிலும் பார்த்து வந்த உலகம் உலோகமாகவுமாகவும் பார்க்கவுள்ளது.

ஹார்வார்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மிகச்சிறிய துணுக்கு அளவில் ஹைட்ரஜன் உலோகத்தை முதன்முதலாக உருமாற்றி (transformative discovery) உருவாக்கியுள்ளதாக Science எனும் அறிவியல் இதழ் அறிவித்துள்ளது.

கோட்பாட்டளவில் (theoretically revolutionize technology) இக்கண்டுபிடிப்பு ஓர் விஞ்ஞான புரட்சியை ஏற்படுத்தும் எனவும், அதிவேக கம்ப்யூட்டர் வடிவமைப்பு (super-fast computers), அதிவேக மிதக்கும் ரயில்கள் (high-speed levitating trains), தீவிர திறன்மிகு வாகனங்கள் (ultra-efficient vehicles), மின்சாரம் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகள் (dramatically improving almost anything involving electricity), வின்வெளி ஓடங்கள் மற்றும் பயணங்கள் போன்றவற்றில் புதிய அறிவியல் புரட்சி உண்டாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் அதேவேளை சாதாரண மற்றும் அசாதாரண அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலைகளை தாக்குப்பிடிப்பதில் இப்புதிய உலோகம் தோற்றால் அனைத்தும் புஸ்வானமாகலாம்.

இந்த உலோகத்தை திரவ ஹைட்ரஜனை உடைக்கப் பயன்படும் இரண்டு வைரத்துண்டுகளை பயன்படுத்தியே ஊடுறுவி பார்க்க இயலும். உயர்அழுத்த இயற்பியல் புனித புத்தகத்தின் அழகிய பக்கங்கள் எனவும் இதைக் கூட்டாக கண்டறிந்துள்ள பேராசிரியர் இஷாக் சில்வேரா மற்றும் டாக்டர் ரங்கா டயஸ் ஆகியோர் வர்ணித்துள்ளனர். இந்த உருமாற்று ஹைட்ரஜன் உலோகம் செயற்கை வைரங்களை மிக உயர்அழுத்தத்தில் உருவாக்கும் பரிசோதனைக் கூடத்தில் நிகழ்ந்த எதிர்பாரா கண்டுபிடிப்பாகும்.

இந்த உலோக ஹைட்ரஜன் சாதாரணமாக அறையில் நிலவும் தட்பவெப்பத்தை தாங்கும் என்றும் தற்போதுள்ள மின்சார வயர்களில் மின்சாரத்தை கடத்தும் போது சுமார் 15 சதவிகிதம் மின்சக்தி இழப்பு ஏற்படுவதாகவும் உருமாற்று உலோக ஹைட்ரஜன் உற்பத்தியாகும் போது மின்சார வயர்களில் இதை மின்கடத்திகளாக பயன்படுத்தி மின்சார இழப்பை நிவர்த்தி செய்யலாம்.

எதிர்காலத்தில் வின்வெளி ஓடங்களுக்கு உலோக ஹைட்ரஜன்களை மாற்று எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் 4 மடங்கு அதிக எரிபொருளை வின்வெளிக்கு எடுத்துச் செல்லலாம் என்றும் இதன் மூலம் வின்வெளியை இன்னும் அதிக தூரம் சென்று ஆராய வழி பிறக்கக்கூடும்.

உருமாற்று உலோக ஹைட்ரஜன் மூலம் ஏவப்படும் எடை குறைந்த கலங்களை (Rockets) பல்வேறு கட்டங்களாக வின்வெளியில் நிலைநிறுத்துவதற்கு பதில் ஒரே கட்டமாக செலுத்தவும், தேவையான தரவுகளை (Payloads) கொண்டு செல்லவும் பயன்படலாம் எனவும் பேராசிரியர் இஷாக் சில்வேரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Source: The Independent / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...