Pages

Thursday, January 5, 2017

தஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு !

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு, இன்று (5.1.2017) தஞ்சாவூர் மாவட்டத்தில் 174 தஞ்சாவூர் சட்ட மன்றத் தொகுதி நீங்கலாக, இதர 7 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் வெளியிட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.

இறுதி வாக்காளர் பட்டியலினை வெளியிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.11.2016 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை
ஆண் - 9,32,121 பெண் - 9,62,982 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் - 55 ஆகக் கூடுதல் வாக்காளர்களின் எண்ணிக்கை 18,95,158 ஆகும்.

01.09.2016 முதல் 30.09.2016 முடிய வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க பெறப்பட்ட விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, தகுதி அடிப்படையில். இன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில்,
ஆண் வாக்காளர் 18,647ம், பெண் வாக்காளர்கள் 22,016ம் ஆகக் கூடுதல் வாக்காளர்கள் 40,663 புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

உரிய விசாரணை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், 01.09.2016 முதல் 30.09.2016 வரை வாக்காளர் பட்டியலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண் 310ம், பெண் வாக்காளர்கள் 405ம் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 1ம் ஆக கூடுதல் 716 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று 05.1.2017 வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு ஆண் 9,50,458, பெண் 9,84,593 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 54ம்; ஆக கூடுதல் 19,35,105 ஆகும்.

மேற்படி இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை தஞ்சாவூர் மாவட்ட மக்கள் தொகையில் 76.40 சதவீதமாகும்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சட்ட மன்றத் தொகுதி வாரியான வாக்காளர்களின் விவரம் திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதியில் 1,20,517 ஆண் வாக்காளர்களும், 1,19,416 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,39,936 வாக்காளர்களும், கும்பகோணம் சட்ட மன்ற தொகுதியில் 1,25,111 ஆண் வாக்காளர்களும், 1,28,186 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,53,297 வாக்காளர்களும், பாபநாசம் சட்ட மன்ற தொகுதியில் 1,21,644 ஆண் வாக்காளர்களும், 1,24,354 பெண் வாக்காளர்களும், 10 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,46,008 வாக்காளர்களும், திருவையாறு சட்ட மன்ற தொகுதியில் 1,24,415 ஆண் வாக்காளர்களும், 1,28,851 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,53,266 வாக்காளர்களும், தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் 1,30,146 ஆண் வாக்காளர்களும், 1,38,352 பெண் வாக்காளர்களும், 18 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,68,516 வாக்காளர்களும், ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதியில் 1,12,391 ஆண் வாக்காளர்களும், 1,17,189 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,29,580 வாக்காளர்களும், பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் 1,12,196 ஆண் வாக்காளர்களும், 1,21,090 பெண் வாக்காளர்களும், 22 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,33,308 வாக்காளர்களும், பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் 1,04,038 ஆண் வாக்காளர்களும், 1,07,155 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,11,194 வாக்காளர்களும், ஆக மொத்தம் தஞ்சாவ10ர் மாவட்டத்தில் 9,50,458 ஆண் வாக்காளர்களும், 9,84,593 பெண் வாக்காளர்களும், 54 இதர வாக்காளர்களும் ஆக கூடுதல் 19,35,105 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், இன்று 05.01.2017 முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில், 174 தஞ்சாவ10ர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகள் நீங்கலாக, மீதம் உள்ள 7 சட்ட மன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மற்றும் வட்ட அலுவலகங்கள், கோட்ட அலுவலகங்கள் ஆகியவற்றில் இறுதி வாக்காளர் பட்டியல் எண்ணிக்கை பார்வைக்காக வைக்கப்படும்.  மேலும், வரும் 26.01.2017 அன்று நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபா கூட்டத்தில் இறுதி வாக்காளர்கள் பட்டியல், வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்படும்.  எனவே அனைத்து வாக்காளர்களும், தமது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் உள்ள வாக்காளர் பட்டியலைப் பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட  ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கணேசன், தேர்தல் வட்டாட்சியர் ராமலிங்கம் மற்றும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...