Pages

Sunday, January 8, 2017

துபாயில் 'எதிஹாத் அருங்காட்சியகம்' திறப்பு: சிறப்பு பார்வை (படங்கள்)

அதிரை நியூஸ்: துபாய், ஜன-08
துபாய் ஜூமைராவில், 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் அமீரக ஒருங்கிணைப்பு பிரகடனம் வெளியிடப்பட்ட அதே இடத்தில் (யூனியன் ஹவுஸ் மற்றும் மிகக்பெரிய அமீரக கொடிக்கம்பம் உள்ள இடம் அருகே) சுமார் 2.5 ஹெக்டேர் பரப்பளவில் தனித்தனி நாடுகளாக இருந்த 7 அமீரக ஆட்சிப்பகுதிகள் ஒன்றிணைந்து 'ஐக்கிய அரபு அமீரகம்' என மலர்ந்த வரலாற்றை கூறும் அதிநவீன 'எதிஹாத் மியூஸியம்' (Etihad Museum) திறந்து வைக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் தற்போது 2017 ஜனவரி 7 முதல் பொதுமக்கள் பார்வைக்காக தினமும் காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகம் 'பிரகடனம் செய்யப்பட்ட கையெழுத்து பிரதி' (Structure in Manuscript Shape) வடிவில் நிர்மானிக்கப்பட்டுள்ளது, மேலும் 8 நிரந்தர உட்தொகுதிகளாக (Pavilions) பிரிக்கப்பட்டுள்ளது, இவற்றில் 7 தொகுதிகள் 7 எமிரேட்டுக்களை நினைவுகூறும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பெவிலியன்: 1
இந்தத் தொகுதியில் அமீரகத்தின் வரலாறு ஆவணப்பட வடிவில் ஒளிபரப்பு செய்யப்படும்.

பெவிலியன்: 2
ஒன்றிணைந்த அமீரகம் உருவாவதற்கு முன்பிருந்த நிலப்பரப்பின் நிலையை வரைபட வடிவில் எடுத்துக்கூறும்.

பெவிலியன்: 3
அமீரகமாக ஒன்றிணையுமுன் இந்தப் பிராந்தியத்தில் நடைபெற்ற முக்கிய வரலாற்றுத் தகவல்களை சொல்லும்.

பெவிலியன்: 4
அமீரகம் உருவாக பாடுபட்ட அன்றைய அபுதாபி ஆட்சியாளர் ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் துபை ஆட்சியாளர் ஷேக் ராஷித் பின் சயீத் அல் மக்தூம் ஆகிய இருவரும் சந்தித்துக் கொண்ட நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பெவிலியன்: 5
அமீரகம் உருவானதற்கான காரணங்கள், தேவைகள் குறித்து விரிவாக எடுத்துச் சொல்லும் பகுதி இது.

பெவிலியன்: 6
அமீரக உருவாக்கத்தின் போது 'ஸ்தாபக தந்தையர்கள்' (Founder Fathers) எதிர்கொண்ட சவால்களையும், முக்கிய தருணங்களையும் எடுத்துக்கூறி அவர்களை நன்றியுடன் நினைவுகூறும் இடமாகவும் விளங்கும்.

பெவிலியன்: 7
அமீரக அரசியலமைப்பு மற்றும் அமீரகம் ஒன்றிணைவதாக கையெழுதிட்ட அசல் பிரகடனமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பெவிலியன்: 8 
இணைப்புக்குப் பிந்தைய அமீரகத்தின் வளர்ச்சியை எடுத்துக்கூறும் பொதுவெளியாக விளங்குகிறது.

Sources: whatson.ae / Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...