Pages

Thursday, January 19, 2017

எனது கோரிக்கைகள் ஏற்பு: 'அரசியல் விமர்சகர்' அதிரை பாருக்

அதிராம்பட்டினம், ஜன-19
17.12.2016 அன்று பிரதமர் அவர்களுக்கு என்னால் அனுப்பப்பட்ட ஆலேசானைகள் பற்றிய சுருக்கமான விபரங்கள்.

திருவாரூர் - காரைக்குடி, பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் ரயில்வே திட்டம் தொடர்பாக முதலில் சுட்டிக்காட்டி மீண்டும் ஒருமுறை அதற்காக நன்றியை தெரிவித்துவிட்டு மற்ற விஷயங்கள் தொடர்பாக என்னுடைய ஆலோசனைகளை சுட்டிக்காட்டியுள்ளேன்.

பாஸ்போர்ட் தொடர்பானவை 
கடந்த பல ஆண்டுகளாக பாஸ்போர்ட் விதிகளை தளர்த்தக் கோரி அடிக்கடி நான் அனுப்பிக்கொண்டிருக்கும் ஆலோசனைகள்  மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 24.11.2015 அன்று தஞ்சை பாஸ்போர்ட் அலுவலகம் சென்ற நான் சில விதிகளை தளர்த்தக்கோரி என்னுடைய ஆலோசனைகளை சுமார் 15 நிமிடங்கள் வரை (Counter No. 11) எடுத்துக்கூறினேன். எனது பழைய ஆலோசனைகள் தொடர்பாகவும், அவர்களிடம் விளக்கிக் கூறினேன். சென்ற மாதம் வெளியான செய்திகளை எல்லாம் நீங்கள் படித்திருப்பீர்கள்.

பாஸ்போர்ட் விதிகள் மேலும் தளர்த்தப்பட்டது. ECNR தொடர்பாக.  
பத்தாம் வகுப்பு பெயில் ஆனவர்களுக்கும்,  (ECNR) வழங்க சொல்லி சென்ற ஆண்டு ஏற்கனவே ஒருமுறை மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். 17.12.2016 அன்று நான் அனுப்பிய ஆலோசனை மத்திய அரசில் தீவிர பரிசீலனையில் உள்ளதாக அறிகிறேன். அதாவது குறைந்த கல்வித்தகுதி உடையவராக இருந்தாலும் செக்யூரிட்டி டெப்பாசிட்டாக ஒவ்வொருவரிடமும் ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம்) பெற்றுக்கொண்டு
விதிகளை தளர்த்தி (மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அரசால் திரும்ப செலுத்தக்கூடியது) அவர்கள் எந்தவித தடங்கலும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக செல்ல பெரும் உதவியாக இருக்கும். காரணம் லேபர் பணிகளுக்கு குறிப்பிடத்தக்க கல்வித்தகுதி தேவையில்லாத ஒன்று என்பது பெரும்பாலனவர்களின் முக்கிய கருத்தாகும். ஏற்கனவே நம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் நம்மால் இங்கேயும் வேலை வழங்க முடியவில்லை. வேலை வேண்டி வெளிநாடு செல்பவர்களுக்கும், உரிய மாற்று ஏற்பாடுகளை இதுவரை மத்திய அரசு உருவாக்கவில்லை. எனவே நான் பிரதமர் அவர்களுக்கு எழுதிய ஆலோசனைகளை எமிக்ரேசன் அதிகாரிகளிடமும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும், குடியரசுத்தலைவர் அவர்களிடமும் விரைவாக கலந்து ஆலோசித்து ECNR தொடர்பாக புதிய விதிமுறைகளை அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

பரிசுத்திட்டங்கள் தொடர்பாக (Lotteries by Central Government in all states)
ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டவும், கல்விக்காகவும் கப்பற்படை, விமானப்படைக்கு நிதி திரட்டவும், மாற்றுத்திறனாளிகள் உதவிக்காகவும், பிரதமர் பொது நிவாரண நிதிக்காகவும், முதல்வர் பொது நிவாரண நிதிக்காகவும் அனைத்து மாநிலங்களிலும் பரிசுத்திட்டங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். இதன்மூலம் நாடு முழுவதும் பல லட்சம் பேர்களுக்கு சுய வேலைவாய்ப்பு கிடைக்கும். தவிர மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இதன்மூலம் புதிய வரி வருவாய் கிடைக்கும்.  ரூபாய் 10, 20, 50, 100 விலையுள்ள பல்வேறு பரிசுத்திட்டங்களையும் நானே தயாரித்து அனுப்புகிறேன் என்பதாகவும், பிரதமர் அவர்களுக்கு 17.12.2016 அன்று தெரிவித்துள்ளேன். பிரதமர் அவர்கள் இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் கலந்து ஆலோசிக்குமாறும் தெரிவித்துள்ளேன்.

தமிழகத்தில் மீண்டும் பரிசுத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கினால் குறைந்தது 5 லட்சம் பேர்களுக்கு சுய வேலைவாய்ப்பு கிடைக்கும். இதே போல் மற்ற மாநிலங்களில் எத்தனை லட்சம் பேர்களுக்கு சுய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டு முதல் திடீரென பரிசுத்திட்டங்களுக்கு தடைவிதித்தது தவறு என்பதை சுட்டிக்காட்டி அப்போதைய முதல்வர் அவர்களுக்கு ஆலோசனைகளை அனுப்பினேன். அது தொடர்பாக அப்போதைய தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. அணில்குமார் கிரி அவர்களிடமிருந்தும் முதல்வர் அலுவகத்திலிருந்தும் எனக்கு கடிதம் வந்திருந்தது. அந்த விபரங்களை அடுத்த சில தினங்களில் விளக்கமாக கூறுகின்றேன். நாட்டில் வேலையில்லா திண்டாட்டங்கள் அதிகரிக்குமானால் குற்றங்கள் பெருக அது காரணமாக அமையும் என்பதை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக கவனத்தில் கொள்ளவேண்டும்.

நாட்டின் பொருளாதாரம், நோபல் பரிசு தொடர்பாக எனது புதிய கருத்துக்களை (13.11.2016 அன்று வெளியிட்ட செய்திகளின் தொடர்ச்சி - அதிரை நியூஸ் ) கூடிய விரைவில் உங்களுக்கெல்லாம் தெரிவிக்கின்றேன். ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாய் தரக்கூடிய புதிய ஆலோசனைகளை தெரிவிப்பவர்களுக்கு 14 லட்சம் ரூபாய் ரயில்வே நிர்வாகம் ஒதுக்கி உள்ளதாக சமீபத்தில் செய்திகள் மூலமாக தெரிந்துகொண்டேன். உங்களுக்கு அந்த பரிசு வழங்குவார்களா என பலரும் என்னிடம் கேட்டனர். அது தொடர்பாக எனக்கு நிர்வாகங்களிடமிருந்து தகவல் வரும்போது தெரியவரும் என்பதாக கூறியிருக்கின்றேன்.

நன்றி !

ஏ. பாருக்,
'அரசியல் விமர்சகர்' 
68 காலியார் தெரு, 
அதிராம்பட்டினம் - 614 701. 
பட்டுக்கோட்டை தாலுகா, 
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...