Pages

Wednesday, January 11, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் “சர்க்கரை நோய் விழிப்புணர்வு” கருத்தரங்கு நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், ஜன-11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் அதிரை அரசு மருத்துவமனை ஆகியோர் இணைந்து “சர்க்கரை நோய் விழிப்புணர்வு” கருத்தரங்கு  நிகழ்ச்சி இன்று (11.01.2017 ) புதன்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இதில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஏ.அன்பழகன், எஸ்.ஹாஜா முகைதீன், ஏ.சீனிவாசன், எஸ்.கார்த்திகேயன், டி.சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் ஏ.எம். உதுமான் முகையதீன் வாழ்த்துரை வழங்கினார்.

இக்கருத்தரங்கில் சுமார் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். “உடற்பயிற்சியும் மற்றும் அளவான உணவும்” ஆகியவை  சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் என இரண்டு காரணிகள் என்று கூறினார்கள். “சர்க்கரை நோய் விழிப்புணர்வு” என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற என்.ஹபிபுல்லா, கே. மகேந்திரன் ஆகிய இரண்டு மாணவர்களுக்கு அதிரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சார்பில் முதல் பரிசு ரூ.3000மும்  என்.செல்வகுமார் என்ற மாணவருக்கு இரண்டம் பரிசு ரூ.1000 என வழங்கப்பட்டது. பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டது.

கட்டுரையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.கே.நீலகண்டன், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர். எஸ்.சாபிரா பேகம், முனைவர்.கே.முத்துக்குமரவேல், முனைவர்.எம்.பழனிவேலு, பேரா.என்.சேகர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இக்கருத்தரங்கினைச் சிறப்பித்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...