Pages

Saturday, January 7, 2017

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகள் நேரடி கள ஆய்வு ( படங்கள் )

தஞ்சாவூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்டக்குழு மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் தலைமையில், போக்குவரத்து ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சத்தியபிரதாசாஹ அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் இன்று (07.01.2017)  நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டனர்.  

இவ்வாய்வின் போது தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுப்பட்டிணம், வடபாதி கோக்கேரி, மேலஉளுர், சொக்கானவூர், தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், சோலைக்காடு, ருத்ரசிந்தாமணி, ஈச்சங்கோட்டை நத்தம், பூதலூர், கோவில்பத்து ஆகிய இடங்களில் நேரடியாக ஆய்வு செய்து பத்திரிக்கையாளர் பயணத்தின் போது தெரிவித்ததாவது:
இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்ததை விட குறைவாக பெய்துள்ளதால், சம்பா, தாளடி பயிர் போதிய தண்ணீர் இல்லாமல் கருகி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் வறட்சி ஏற்பட்டுள்ளது.  விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் நலன் காக்கும் மாண்புமிகு அம்மாவின் அரசு மூன்று தினங்களுக்கு முன் நடைபெற்ற மாண்புமிகு முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் அந்தந்த அமைச்சர்கள் அரசு உயர் அதிகாரிகளுடன், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் விவசாயிகள் பயிர் செய்துள்ள விளைநிலங்களை நேரடியாக கள ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆலோசனையின்படியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகபொதுச் செயலாளர் சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படியும் இன்று நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2012-2013 ஆண்டுகளில் வறட்சி ஏற்பட்ட பொழுது மறைந்த மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு நிவாரணம் வழங்கியது போல் தற்போது நிவாரண உதவித் தொகையை தமிழக அரசு கண்டிப்பாக வழங்கும். மாண்புமிகு அம்மா அவர்கள் விவசாயிகளின் பயிர்களை காப்பீடு செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.  அதன்படி பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கப்படும்.  என்றும் விவசாயிகள் நலன் காக்கும் மாண்புமிகு அம்மாவின் அரசு விவசாயிகளின் நலன் காக்கவும், அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நிவாரண உதவித்தொகை வழங்கும் என மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் தெரிவித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் வறட்சி தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர்  இரா.துரைக்கண்ணு அவர்கள் தலைமையிலும், போக்குவரத்து ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சத்தியபிரதாசாஹ அவர்கள்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இவ்வாய்வின் போது மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.கு.பரசுராமன் (தஞ்சாவூர்), ஆர்.கே. பாரதிமோகன் (மயிலாடுதுறை), சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்), சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), ம.கோவிந்தராசு (பேராவூரணி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரை.திருஞானம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.ரெத்தினசாமி, ராம்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் எஸ்.மோகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள், கோபிநாதன், சூரியநாரயணன்,  நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன்,  வருவாய் கோட்டாட்சியர்கள் த.சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), இணை இயக்குநர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சொக்கலிங்கம், வட்டாட்சியர் குருமூர்த்தி, ரவிச்சந்திரன், திருமால், கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...