Pages

Friday, January 6, 2017

மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் நிதி உதவி !

18 வயது முதல் 60 வயதுடைய உடலியக்க குறைபாடுடையோர், பார்வையற்றோர் மற்றும் காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதோர் சுயதொழில் புரிவதற்கு தேசிய ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டு கழகத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வங்கிக்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம். சுயதொழில் புரிய விரும்பும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

18 வயது முதல் 60 வயதுடைய உடலியக்க குறைபாடுடையோர், பார்வையற்றோர், காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதோர் தேசிய ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டு கழகத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வங்கிக்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் 10.1.2017 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தஞ்சாவூர் மேல வீதியில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெறுகிறது.

அம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்கடன் வழங்கும் விதமாக வங்கிக்கடன் பெறுவதற்கான ஆலோசனைகள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளது. சுயதொழில் புரிய விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் 1-கடவுச் சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் நேரில் கலந்து கொண்டு விண்ணப்பம் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...