Pages

Thursday, January 19, 2017

ஜல்லிக் கட்டு, வெற்றிக் கட்டு!

சென்றேன், கண்டேன், ஆர்ப்பெரியும் கடலென
பொங்கியெழுந்த ஜல்லிக் கட்டு
இளைஞர் அடலேறுகள்-மெரினா கடலோரம்
கல்லூரி மாணவப் பருவ அறுபத்தைந்தில்
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில்
நானும் பங்கு கொண்டு குண்டாந்தடி
தழும்பினைப் பெற்றவன்

அன்று எழுப்பியது ஹிந்தி ஒழிக என்ற கோசம்
இன்று எழுப்பியது வேண்டும் ஜல்லிக் கட்டு கோசம்
மூன்று நாட்களாக  கொட்டும் பணியிலும்
வீசும் கடுங்குளிர் கடற் காற்றிலும்
துவண்டு விடாத இளஞ்சிங்கங்களை-கண்டேன்
அவர்கள் எழுப்பிய ஜல்லிக் கட்டு கோசம்
ஆர்ப்பரியும் கடல் அலையினைத் தோக்கடித்தது

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே, தங்கம்
பாடியது அன்று, இன்று தை பிறந்து வழிபிறக்கவில்லை
ஏறு பிடித்து உழவன் வாழ்ந்தான் அன்று- இன்று
ஒட்டிய வயிறும்-கட்டிய கையுமாக வாடிய பயிறுமாக
திருவிழா எடுக்க கையில் நாலு காசில்லாமல்
கண்ணீர் சிந்தி செத்து மடிகிறான் கடனில்
தட்டிக் கேட்க நாதியில்லை-இளைஞர்களைத் தவிர

உழைக்கும் மாடுகளுக்கு வணக்கம் செலுத்த
அலங்கரித்து மாலையிட்டு வயல் பக்கம் வரும்-மஞ்சுவிரட்டு
அந்தக் காளைகள் கால் பாதிக்கும் வயல்கள் செழிக்கும்
ஆனால் பருவமும் பொய்த்தது-பவிக் கர்நாடகமும்
காவிரித் தண்ணீர் தராது மறுத்தது
கருகியது விளை நிலமட்டுமல்ல
விவசாயிகள் வாழ்வும் தானே
கொழுத்த யானையின் கொம்பையும் எதிர்கொண்டு
போர்க்களத்தில் எதிரியின் கூட்டத்தினை முறியடிக்கும்
யானைப் படையினைக் கொண்டவன் தமிழன்

வடபுலத்தில் படை செலுத்தி அரசர்களை
சிறைப் பிடித்து கோயில் கட்ட
மலைக் கற்களை சுமக்கச் செய்தவன் தமிழன்
திமிரும் காளைகள் திமிலை தாவிப் பிடித்து
சீவிய கொம்புகளை மடக்கி
பரிசுகள் பல பெறுவான் -வீரன்
அலங்காநல்லூரில் நான் கண்ட காட்சி

காளை விளையாட்டில் கூறிய கத்தி பாய்ச்சி
கொடூரமாக கொல்வர்  ஸ்பெயின் நாட்டில்
 வீதிகளில் காளைகளை ஓட விட்டு கிளித்தட்டு
ஆடுவர் இளங்காளைகள்  தென் அமெரிக்காவில்
ஆட்டுக் கிடாயினை ஓடச் செய்து-குதிரையில் சவாரி
செய்து கொல்வார் ஆப்கானிஸ்தானில்-வடபுலத்தில்
எருமையினை குன்றிலிருந்து தள்ளி குதுகூலம் கொள்வர்

குதிரை நுரை தள்ளி நோகடிப்பர் பந்தயத்தில்
யானை அங்குசம் குத்து பட்டு ஓடும் கேரள பந்தயத்தில்
சுமை தாங்காது கழுத்துப் புண் நோக கலங்கடிப்பர்
பிராணிகளின் பசியினை போக்காமல்  சுற்றுலா தளங்களில்
பிக்கினி உடையுடன்  கொட்டமடிக்கும் 'பீட்டா'
காளைகளை குழந்தைகள் போல காக்கும்
தாக்க பயன்படுத்தும் ஆயுதம்-ஜல்லிக் கட்டுக்கு தடையா

இளிச்ச வாயனல்ல இரும்புத் தமிழன்-குனியக்
குனிய கொட்டு வாங்க மாட்டான் இனியும்
'போக்கிரி' என்கிறான் போக்கற்ற மனுவாடி
பூச்சாண்டி காட்டாதே அதிகார ஆணவத்தில்
பொங்கி எழுந்து விட்டான்- வீராத் தமிழன்
இனியும் பொறுக்க மாட்டான் துன்பத் தமிழன்
இப்படை தோற்பின் எப்படை வெல்லும்

போர் முரசு கொட்டிவிட்டான் தமிழன் -ஓயமாட்டான்
வெற்றி முரசு கொட்டும் வரை!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

1 comment:

  1. மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது என்பதும் மத்திய அரசின் Attorney General of India திரு Mukul Rohatgi மாநில அரசே சட்டம் இயற்றிக்கொள்ள அதிகாரம் உள்ளது என்றும் ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டில் வகைப்படுத்தி பார்த்தால் அது மாநில அரசின் அதிகார வரம்பில் வருகிறது அதனால் மாநில அரசே அவசர சட்டம் இயற்றலாம் என்றும் கூறியதை நம்பி நமது முதல்வர் அவசர சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறுவது தமிழ் மக்களை ஏமாற்றும் வேலை. முதலில் இதே Attorney General of India திரு Mukul Rohatgi அவர்கள் தான் நமக்கு காவேரி மேலாண்மை வாரியம் கிடைக்காமல் செய்தவர். இவரது அறிவுரையை நம்பி நம்மை மீண்டும் ஏமாற்றப்பார்க்கிறார்கள். விளையாட்டு என்ற வகையில் அவசர சட்டம் கொண்டு வந்தால் அதற்கு உடனே PeTA வால் உச்ச நீதி மன்றத்தில் தடை பெற்று விடமுடியும். ஏனெனில் முன்னரே PeTA உச்ச நீதி மன்றத்தில் வைத்த வாதத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அல்ல. விளையாட்டு என்றால் பங்கு பெரும் இருவரும் ஒப்புதல் தர வேண்டும். ஜல்லிக்கட்டில் காளைகளின் ஒப்புதல் பெற முடியாது என்று கூறி தான் தடை வாங்கி உள்ளனர். அதனால் தமிழக அரசு கொண்டுவர முயற்சிக்கும் அவசர சட்டம் தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்ற நடக்கும் நாடகம். ஒரே தீர்வு காளைகளை காட்சி பட்டியலில் இருந்து நீக்குவது தான். அது மத்திய அரசின் கையில் மட்டுமே உள்ளது. அதற்கு மத்திய அரசுதான் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். PCA Act இல் திருத்தம் செய்ய வேண்டும். தற்போது இவர்கள் செய்யும் வேலை நம்மை ஏமாற்றத்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. எப்படி உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வந்து விட்டது இனி காவேரியில் தண்ணீர் வந்து விடும் இது தமிழனுக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடி கடைசியில் ஏமாந்து நிற்கிறோமே அதே போலத்தான் தற்போதும் நடக்கும்.

    ஒரு பிரயோஜனம் இல்லாத வெளிநாட்டு செய்திகள் அதிகமாக இத்தலத்தில் பதிவாகிறது அச்செய்தியின் தலைப்பை பார்ப்பதோடு சரி வாசிப்பதற்கு ஆர்வமில்லாமல் போகிறது., உங்கள் சிறப்பு கட்டுரை இத்தலத்தை பார்ப்பவர்களுக்கு
    சந்தோசம் என்பதால் வெளிநாட்டு செய்திகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்., உரத்த சிந்தனை தரும் கட்டுரை படைப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...