Pages

Friday, January 13, 2017

வணிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதிப்பு கூட்டு வரி சட்டம் 2006ன் கீழ் வரி செலுத்துவோர் அடையாள எண் TIN பதிவு பெற்ற அனைத்து பணிகளுக்கும்  சரக்கு மற்றும் சேவை வரி அமுல்படுத்துவதால்
ஜிஎஸ்டி தொடர்பாக www.gst.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என துணை ஆணையர் வா.சி.சங்கரேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும்  ஒரே சீரான வரி விதிப்பை ஏற்படுத்தும்  நோக்கில் உருவாக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விரைவில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கான இணைய தளம் மற்றும் மென்பொருளை உருவாக்கும் பணியினை சரக்கு மற்றும் சேவை கட்டமைப்பு (GSTN) நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனம் ஜிஎஸ்டி தொடர்பாக www.gst.gov.in என்ற இணைய தளத்தைஉருவாக்கி உள்ளது.

தமிழ் நாட்டில் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பதிவுபெற்ற அனைத்து வணிகர்களும் இந்த இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். சனவரி 1, 2017 முதல் சனவரி 15, 2017 வரை இந்த பதிவை வணிகர்கள் மேற்கொள்ளலாம்.  இந்த இணைய தளத்தில் பதிவு செய்ய தற்காலிக ஐடி (ID) மற்றும் பாஸ்வேர்டு (Password) வணிகர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் வணிக வரித்துறை இணையதளம் https://ctd.tn.gov.in மூலமாக வழங்கப்படும்.

தற்காலிக ஐடி (ID) மற்றும் பாஸ்வேர்டு பெற்றவுடன் ஜிஎஸ்டி இணைய தளத்தை உபயோகப்படுத்தி இந்த பதிவை பூர்த்தி செய்ய வணிகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஜிஎஸ்டி பதிவை பூர்த்தி செய்ய https://ctd.tn.gov.in இணையத்தில் உள்ள உதவி கோப்பை (Help File) பயன்படுத்திக் கொள்ளலாம்.

வணிகவரித்துறையின் சார்பில் மாநிலத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் சிறப்பு முகாம் 1 சனவரி 2017 முதல் 15 சனவரி 2017 வரை ஏற்படுத்தப்பட உள்ளது.  அனைத்து வணிகர்களும் ஜிஎஸ்டி இணைய தளத்தில் பதிவு பெற இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த முகாம்களின் விவரம் வணிகர்களுடைய வரி விதிப்பு வட்டங்களில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு துணை ஆணையர் வா.சி.சங்கரேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...