Pages

Saturday, January 14, 2017

துபாயில் முதன்முதலாக ரோபோ மருந்தகம் அறிமுகம் !

அதிரை நியூஸ்: ஜன-14
அமீரகத்திலேயே முதன்முதலாக துபை அல் ராஷித் மருத்துவமனையில் ரோபோ பார்மஸி (மருந்தகம்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வியாழன் அன்று அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டிருந்தாலும் நாளை ஞாயிறு (15.01.2017) முதல் வாடிக்கையாளர் சேவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சுமார் 35,000 வகை மருந்துகளை தன்னுள் சேமித்து வைத்திருக்கும் இந்த மருந்தகம் 1 நிமிடத்தில் 12 மருத்துவ பரிந்துரைகள் மீது மருந்துகளை வழங்கும் தன்மையுடையது. மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் பரிந்துரைக்கும் மருந்துகளை உடனுக்குடன் எடுத்து வைத்துக் கொள்ளும் இந்த ரோபோவின் குறிப்பிட்டதொரு பொத்தானை அழுத்தினால் பார்கோடு அடிப்படையில் இயங்கி டாக்டர்களின் பரிந்துரையில் உள்ளவாறு சரியான மருந்துகளை வாடிக்கையாளர் வசம் வழங்கும்.

விரைவில் துபையின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இத்தகைய ரோபோ பார்மஸிக்கள் துவக்கப்படவுள்ளன. இந்த ரோபோ மருந்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரம் குறைவதுடன் மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப சரியான மருந்துகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Emirates 247 / Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...