Pages

Tuesday, January 3, 2017

செட்டியா குளம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் அதிகாரிகள் அளவீடு !

அதிராம்பட்டினம், ஜன-03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டு நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் நடுத்தெரு வாய்க்கால் தெருவில் உள்ள செட்டியா குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன்படி கடந்த 2013 ம் ஆண்டு புனரமைக்கும் பணிகள் நடந்து முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்நிலையில் குளத்தை சுற்றி காணப்படும் பகுதிகளின் சிலவற்றில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், இவற்றை அகற்றக்கோரி இப்பகுதியை சேர்ந்த சரபுதீன் கோர்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக கடந்த டிச.15-ம் தேதி உயர்நீதிமன்றம் வருவாய் அலுவலர்களுக்கு கடிதங்கள் அனுப்பி 2 மாத காலக்கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட பகுதியை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்று அறிவுறுத்தியது.

இதையடுத்து கடந்த 23-12-2016 அன்று வெள்ளிக்கிழமை மாலை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் ராஜகுமாரி, கிராம நிர்வாக அலுவலர் மகர ஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று ( 03-01-2017 ) செவ்வாய்க்கிழமை மாலை செட்டியா குளத்தை சுற்றி காணப்படும் பகுதிகளை கிராம நிர்வாக அலுவலர் மகர ஜோதி, டிடிஎஸ் தங்கராசு, பட்டுக்கோட்டை பிர்கா சர்வேயர் செல்வகுமார், தலையாரி பத்மநாபன் உள்ளிட்டோர் அளந்து குறியீடு செய்தனர். மேலும் நாளை மீண்டும் அளவீடு செய்யும் பணி தொடர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பி ஆக்கிரமிப்பு பகுதிகளை தானாக முன்வந்து அகற்றிக்கொள்ள காலக்கெடு நிர்ணயிக்கக்கப்படும் என கூறப்படுகிறது.
 
 
 
 
 
 


1 comment:

 1. settiyakulam sutry kudi irupor naththam porampoku makkal waalum podhu muraiyaha tax katti irukraargal. but ingu makkal kudi iruka mudiya villai kosu thollai kosu thollaiku endha panjayathum marundhu adika villai virum pogai mattum adipaargal.
  setiya kula sutri irupor edhachum oru kodiya noi la waaldhu kondu irukiraargal kaaranam sugadhaaram sari illai kosu thollai,
  kosu kadi next fever after kidnee or liver eeral problem kadipaga andha side waalum makkal ku warudhu MMS Kandukollai cheramen aslam kaka vum indha idadhuku kandukolla villai
  setiya kulam mattrum hospital street kulam sutry kosu saamrajiyamaha iruku
  kulathai eduthu vittu park pooga vaga maatrinaal nalladhu andha idathil kosu marundhu adithaal nalladhu:
  life save pannalam

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...