Pages

Thursday, January 5, 2017

கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜன-05
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல் துறை மற்றும் கடல்வாழ் உயிரி பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் (OMCAR) இணைந்து ஒரு நாள் கருத்தரங்கம் வெளிவயல் பால்க் பே அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் பி. குமாரசாமி கருத்தரங்கம் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் கடல்வாழ் உயிரி பாதுகாப்பு அமைப்பின் நிறுவன இயக்குநர் முனைவர் வி. பாலாஜி கலந்துகொண்டு, கடல்புல் வளங்கள் மற்றும் மீன்வள உற்பத்தியின் முக்கியத்துவம் மற்றும் அவற்றை பாதுகாப்பது குறித்து பவர் பாயிண்ட் ஒளித்திரை மூலம் விளக்கி கூறினார். மேலும் மீன்வள உற்பத்தி, கடல் அரிப்பு, சுனாமி பேரலைகளை அமைதிப்படுத்ததுதல், கடல் சூழ்நிலை மண்டலத்தில் கடல்புல்லின் முக்கியத்துவம் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கடல்புல் பயன்பாடு குறித்து குறிப்பிட்டு பேசினார்.

தொடக்கத்தில் சுற்றுச்சூழல் அமைப்பின் (Enviro Club) ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் எஸ். ரவீந்திரன் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் முனைவர் ஏ. அம்சத் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் கே முத்துகுமாரவேல், முனைவர் ஓ. சாதிக், முனைவர் வி. கானப்பிரியா, முனைவர் ஏ மகாராஜன், முனைவர் ஜே சுகுமாறன், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...