Pages

Wednesday, January 18, 2017

ஏர் இந்தியா விமானத்தில் பெண்களுக்கு தனியிட இருக்கை அறிமுகம் !

அதிரை நியூஸ்: ஜன-18
இன்று முதல் ஏர் இந்தியா விமானத்தின் உள்நாட்டு சேவையில் தனியாக பயணிக்கும் பெண்களுக்காக எகனாமி வகுப்பில் 6 தனி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன, இதன் மூலம் விமானத்தில் பெண்கள் சந்திக்கும் பாலியல் தொந்தரவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு சேவையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு ஏர் இந்தியா விமானத்தின் எகனாமி கேபினின் மூன்றாவது வரிசையில் இந்த 6 மகளிர் மட்டும் இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும், இதற்காக கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்றும், இந்த தனி இருக்கைகளுக்கான முன்பதிவு செக்-இன் முடிய ஒரு மணிநேரம் வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் வெற்றிபெரும்பட்சத்தில் இதேபோன்ற பெண்களுக்கான தனி இருக்கை ஒதுக்கீடுகள் சர்வதேச விமான சேவையிலும் கொண்டு வரப்படவுள்ளது. இந்தியாவில் பஸ், ரெயில் போன்ற போக்குவரத்துக்களில் பெண்களுக்கான தனியிருக்கைகளும், தனிப்பெட்டிகளும் நடைமுறையில் இருக்கும் நிலையில் உலகளவில் இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி மும்பையிலிருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஒரு பெண் பயணியும், கடந்த வாரம் டெல்லியிலிருந்து மஸ்கட் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் விமான பணிப்பெண்ணும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

இந்த நல்ல முயற்சியை வரவேற்கும் அதேவேளையில் கூடுதலாக விமானத்தில் மது பரிமாறுவதற்கும், குடித்துவிட்டு வருபவர்களை விமானத்தினுள் ஏற அனுமதியும் மறுத்தால் பலன் இன்னும் அதிகம் கிடைக்கும். இந்த நல்ல விஷயத்தையும் ஏர் இந்தியா தொடக்கி வைத்தால் பெண்கள் இன்னும் பாதுகாப்பு பெறுவர்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...