Pages

Tuesday, January 17, 2017

நிலவில் கடைசியாக காலடித்தடம் பதித்த மனிதன் மறைந்தார் !

அதிரை நியூஸ்: ஜன-17
1972 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் நாள் கடைசியாக நிலவில் காலடி பதித்த மனிதன் யூஜீன் ஏ. செர்னான் என்ற இயற்பெயர் கொண்ட 'ஜீன் செர்னான்' தனது 82வது வயதில் ஹவுஸ்டன் மருத்துவமனையில் இறந்தார்.

டிச. 11 ஆம் நாள் நிலவுக்கு புறப்பட்ட ஜீன் செர்னானுடன் ஷூமிட், ரொனால்டு இவான்ஸ் என்ற இரு விண்வெளி வீரர்களும் பயணித்தனர். ரொனால்டு இவான்ஸ் என்ற வீரர் அப்போலோ 17 என்ற விண்கலக் கட்டுப்பாட்டை (Command Module) உள்ளிருந்து கவனித்துக் கொள்ள செர்னானும் ஷூமிட்டும் விண்கலத்திலிருந்து வெளியேறி 3 நாட்களில் சுமார் 22 மணிநேரம் நிலவில் இறங்கி ஆய்வு செய்தும் 249 பவுண்ட் எடையுள்ள நிலவின் ஆய்வு மாதிரிகளுடனும் பூமிக்கு திரும்பினர்.

ஆம்ஸ்ட்ராங் முதல் செர்னான் வரை சுமார் 1 டஜன் விண்வெளி வீரர்களே நிலவுக்கு சென்று திரும்பியுள்ளனர். தற்போது இந்தியா நிலவுக்கு விண்வெளி ஓடத்தை அனுப்பும் முயற்சி இறங்கியுள்ளதால் எதிர்காலத்தில் இந்திய விண்வெளி வீரர் ஒருவர் நிலவில் காலடி எடுத்து வைக்கலாம்.

நீல் ஆம்ஸ்ட்ராங் 1969 ஆம் ஆண்டு நிலவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தது சரித்திரமாகியுள்ளது போலவே 1972 ஆம் ஆண்டு நிலவிலிருந்து ஷூமிட் முதலில் வெளியேறி விண்கலத்திற்கு திரும்ப அவருக்குப் பின் செர்னான் கடைசியாக வெளியேறிய நிகழ்வும் இன்று வரை முறியடிக்கப்படாத சரித்திரமாக திகழ்கிறது.

மேலும் தனது 9 வயது மகள் Teresa Dawn Cernan என்பவரின் நினைவாக TDC என்று நிலவில் எழுதி வைத்துள்ளார், தனக்குப்பின் நிலவுக்குச் செல்லும் யாராவது ஒரு விண்வெளி வீரர் படிக்கக்கூடும் என்ற அவரது சின்னச் சின்ன ஆசை கடந்த 40 வருடங்களாக சாத்தியமாகமலேயே உள்ளது.

இதற்கு முன் 1969 ஆம் ஆண்டு ஜெமினி 9 என்ற விண்கலத்தில் கமாண்டிங் விமானியாக டாம் ஸ்டாப்போர்டு என்பவர் பணியாற்ற விண்வெளி வீரராக உடன் சென்ற செர்னான் சுமார் 2 மணிநேரம் வான்வெளியில் இறங்கி நடந்ததன் மூலம் வான்வெளியில் நடந்த 2வது அமெரிக்கர் என்ற பெயரை பெற்றார் என்றாலும் பலவகையான இயந்திரக் கோளாறுகளால் கிட்டதட்ட செத்துப் பிழைத்தார் என்றே கூறலாம். அதீத வியர்வையால் நீர் சத்து குறைந்து சுமார் 9 பவுண்ட் உடல் எடையை வான்வெளியிலேயே அப்போது இழந்தார்.

கடந்த 6 வாரங்களுக்கு முன் தான், 1962 ஆம் ஆண்டு விண்வெளியை சுற்றி வந்த முதல் அமெரிக்க வீரர் ஜான் கிளென் மரணமடைந்தார். அதேபோல் நிலவில் முதல் காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் 2012 ஆம் ஆண்டு மரணித்தார்.

செர்னான் தன்னுடைய வாழ்க்கையில் மொத்தம் 566 மணிநேரம் 15 நிமிடங்களை வான்வெளியில் செலவிட்டுள்ளார், நிலவிலும் விண்வெளி ஓடத்திற்கு உள்ளே வெளியே இருந்த அந்த 73 மணிநேரங்களையும் சேர்த்து.

இவரது சுயசரிதையின் அடிப்படையில் செர்னானை பற்றி 2016 ஆம் ஆண்டு "The Last Man on the Moon" என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது.

Sources: Khaleej Times / Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...