Pages

Tuesday, January 3, 2017

பிப்ரவரி மாதத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்த்துகிறது சவூதி !

அதிரை நியூஸ்: சவூதி அரேபியா, ஜன-03
உலகின் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா எதிர்வரும் 2017 பிப்ரவரி மாதத்தில் ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதி கச்சா எண்ணெய் விலையை உயர்த்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரப் லைட் (Arab light) எனப்படும் கச்சா எண்ணெயின் பேரல் ஒன்றின் மீது சுமார் 50 சென்டுகளும் (Cents) (அரை டாலர்) அரப் ஹெவி (Arab Heavy) எனப்படும் கச்சா எண்ணெயின் மீது சுமார் 90 சென்டுகள் முதல் 1 டாலர் வரை உயரக்கூடும், இந்த விலையேற்றம் உலகிலேயே அதிகளவில் இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகளுக்கு மட்டுமே.

ஆசிய நாடுகளுக்கு விலையை ஏற்றும் அதேவேளையில் ஆசிய நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியையும் அதிகரித்து தரவும் ஒப்புக்கொண்டுள்ளது, இதனால் பல ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியின் அளவை குறைக்கவுள்ளது.

பெட்ரோல் உற்பத்தி நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட சமீபத்திய உடன்படிக்கையின் படி 2017 ஜனவரி மாதத்தில் தனது மொத்த உற்பத்தியில் நாள்தோறும் 486,000 பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒப்புக்கொண்டதை அடுத்து சவுதியின் தினசரி உற்பத்தி 10.058 மில்லியன் பேரல்களாக குறைந்துள்ளன.

ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதியில் கச்சா எண்ணெய்க்கான விலையை சவுதி அறிவிக்கும் அதனை தொடர்ந்தே மற்ற ஏற்றுமதி நாடுகளான ஈரான், குவைத், ஈராக் போன்ற நாடுகள் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலையை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சுமார் 12 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் விலையில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

இந்திய மத்திய அரசின் மைண்ட் வாய்ஸ்: ஐ ஆம் வெயிட்டிங்!

Source: Reuters / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...