Pages

Thursday, January 26, 2017

குடியரசு தினத்தையொட்டி அதிரையில் இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம் !

அதிராம்பட்டினம், ஜன-26
இந்தியாவின் 68வது குடியரசுதினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் அட்ஜயா பல் மருத்துவமனையில்வியாழக்கிழமை நடைப்பெற்றது.

முகாமை டாக்டர். எம்.எஸ்.முகம்மது மீரா சாகிப் தொடங்கி வைத்தார். அட்ஜயா பல் மருத்துவமனை பல் மருத்துவர் பா.பாரதி வரவேற்றார். டாக்டர். எஸ்.எம்.அமீர் சுல்தான், டாக்டர். டி.செல்வ சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் சென்னையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் வருகைபுரிந்து சிகிச்சை அளித்தனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக பல் சம்பந்தபட்ட அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் பட்டுக்கோட்டை ஆதிராஜாராம் நன்றி கூறினார்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...