Pages

Sunday, January 8, 2017

FM ரேடியோ சேவையை முற்றாக நிறுத்தும் உலகின் முதல் நாடு !

அதிரை நியூஸ்: ஜன-08
1933 ஆம் ஆண்டு எட்வின் ஹெச் ஆர்ம்ஸ்ட்ராங் என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளரால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது எம்.எம் (FM) எனும் பண்பலை வானொலி சேவை.

எப்.எம் தொழில்நுட்பத்திலிருந்து டிஜிட்டல் ஆடியோ பிராட்காஸ்டிங் (DAB) எனும் நவீன தொழில்நுட்பத்திற்கு மாறத்துவங்கி உலகம் எப்.எம் சேவைக்கு விடை கொடுக்கத் துவங்கிவிட்டது.

1950 ஆம் ஆண்டு முதன்முதலாக போடோய் (Bodoe) நகரில் துவங்கிய நார்வே நாட்டிற்கான FM ரேடியோ சேவை, தற்போது நார்வே நாடு முழுவதும் பரவியுள்ள இந்த சேவையை 2017 ஜனவரி 11 ஆம் தேதி முதல் முற்றாக நிறுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளது நார்வே அரசு. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சுமார் 66 சதவிகித மக்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். 17 சதவிகிதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர், எஞ்சியோர் முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர் என கடந்த மாத ஆய்வு தெரிவிக்கின்றது.

நார்வேயை  தொடர்ந்து சுவிட்சர்லாந்து, டென்மார்க் மற்றும் பிரிட்டனும் 2020 ஆம் ஆண்டுக்குள் FM சேவையை கைகழுவும் திட்டத்தில் உள்ளன. பல நாடுகள் தற்போது FM மற்றும் DAB டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமும் இருவகையான சேவைகளையும் ஒருசேர வழங்கி வருகின்றனர்.

ஒரு எப்.எம் வானொலி நிலையத்தை நடத்தும் அதே செலவில் சுமார் 8 டிஜிட்டல் ஆடியோ வானொலி நிலையங்களை நடத்த முடியும் என்றாலும் வாகனங்களுக்கான டிஜிட்டல் ரேடியோ (DAB Receiver) ரிசீவர்களின் விலை சுமார் 252 டாலருக்கு (1500 நார்வேஜியன் கிரவுன்ஸ்) விற்கப்படுவதால் சுமார் 2 மில்லியன் வாகனங்கள் இன்னும் புதிய டிஜிட்டல் முறைக்கு மாற தயக்கம் காட்டுகின்றன. அதேபோல் வீடுகளிலிருந்து எப்.எம் கேட்கும் பல மில்லியன் மக்கள் வானொலி கேட்கும் பழக்கத்தையே கைவிடுவர் எனவும் அஞ்சப்படுகிறது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...