Pages

Thursday, February 9, 2017

அபுதாபியில் 1 நம்பர் பிளேட்டை ஏலம் எடுத்த நபருக்கு சிறை !

அதிரை நியூஸ்: பிப்-09
அமீரகத்தில் பேன்ஸி எண்களாக கருதப்படும் வாகனப்பதிவு எண்களை (Vehicle Registration Nos.) துபை, அபுதாபி, ஷார்ஜா போன்ற எமிரேட்டுகளில் தனித்தனியாக பகிரங்க ஏலம் விட்டு அந்தந்த எமிரேட்டுகளைச் சேர்ந்த போக்குவரத்து துறையினர் நிதி திரட்டுகின்றனர்.

அதனடிப்படையில், கடந்த 2016 நவம்பர் 19 ஆம் தேதி அபுதாபியில் பல பேன்ஸி (Fancy) பதிவு எண்களுடன் 1 என்ற எண்ணும் பகிரங்க ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தில் அரபு நாட்டைச் சார்ந்த ஒருவர் 31 மில்லியன் திர்ஹத்திற்கு ஏலம் எடுத்ததுடன் அதற்கான தொகையை காசோலையாகவும் (Cheque) கொடுத்தார்.

அப்புறமென்ன? தன்னுடைய வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லாத நிலையில் காசோலையை கொடுத்ததுடன், ஏலம் எடுத்த எண்ணை இன்னும் கூடுதல் விலைக்கு பிறரிடம் விற்றுவிட்டு காசோலைக்கான பணத்தை செலுத்தவும், மீதமாகும் பணத்தை செலவுக்கு வைத்துக்கொள்ளவும் திட்டமிட்டிருந்தார் ஆனால் அவர் திட்டமிட்டபடி நம்பர் பிளேட்டை விற்கமும் முடியாமல், காசோலைக்கு தேவையான பணத்தை திரட்ட முடியாமல் போனதால் அவரது 'பலே திட்டம்' பணலாகி போனதால் தற்போது கைது செய்யப்பட்டு வழக்கை சந்தித்து வருகிறார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...