Pages

Monday, February 6, 2017

உலகின் நீண்டதூர கத்தார் விமானம் 14,535 கி.மீ பயணம் செய்து சாதனை !

அதிரை நியூஸ்: பிப்-06
தற்போது சேவையிலுள்ள விமான தடங்களிலேயே உலகின் மிக நீண்டதூர இடைநில்லா பயணமாக கத்தார் - ஆக்லாந்து இடையே நேற்று QR920 என்ற எண்ணுள்ள கத்தார் ஏர்வேஸ் விமானம் 16.23 மணிநேரத்தில் நிகழ்த்திய புதிய சாதனை பயணமாக விளங்குகிறது, திட்டமிட்ட பயண நேரத்திற்கு 5 நிமிடத்திற்கு முன்பாகவே விமானம் தரையிறங்கியது.

போயிங்  777-200LR ரக விமானத்தின் இந்த சாதனைப் பயணத்தில் 4 விமானிகளும் 15 விமான சிப்பந்திகளும் பணியிலிருந்தனர். மேலும், 1,100 கப் தேநீர் மற்றும் காபிகள், 2000 குளிர்பானங்களும், 1,036 உணவுத்தட்டுகளும் பயணிகளுக்கு பரிமாறப்பட்டுள்ளன. இந்த விமானம் தனது பயணத்தின் போது 10 சர்வதேச நேர மண்டலங்களை (Time Zones) கடந்து சென்றுள்ளது.

ஆக்லாந்து நேரப்படி இன்று காலை 7.25 மணியளவில் (அமீரக நேரம் நேற்றிரவு 10.25 மணிக்கு) தரையிறங்கிய விமானத்திற்கு உலக நடைமுறைப்படி தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது. கடந்த 2016 மார்ச் மாதம் எமிரேட்ஸ் விமானம் துபையிலிருந்து ஆக்லாந்திற்கு 14,200 கி.மீ பறந்து சென்றிருந்ததே இவ்விமான தடத்தின் முந்தைய அதிகபட்ச தூரமாகும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...