Pages

Monday, February 27, 2017

1.5 லட்சம் டாலர் மதிப்புள்ள காரை சோதனை ஓட்டத்தின் போது ஆட்டையை போட்ட ஆசாமி !

அதிரை நியூஸ்: பிப்-27
அமெரிக்கர் ஆட்டையை போடுவதில் கில்லாடிகள் என்பதை அறிவோம், உதாரணத்திற்கு அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை சுரண்டுவது என முடிவெடுத்துவிட்டால் எத்தகைய பொய்யையும் சொல்லி குறிப்பிட்ட நாடுகளை போரெடுத்து சூறையாடி தங்களின் கைக்குள் கொண்டு வரக்கூடியவர்கள் என்பது நிதர்சன வரலாறு.

அதேபோல் தங்களுடைய மருந்தை விற்பதற்காகவே பிற நாடுகளில் பலவகையான நோய்களை பரப்பி நமது பொருளாதாரத்தை நமக்கு தெரியாமலேயே சுரண்டும் வல்லமை படைத்தவர்கள் என்ற கூற்றும் உண்டு.

நாடே இப்படி என்றால் அதன் பிரஜை மட்டும் சளைத்தவர்களா என்ன? மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்ற சொல்லை மெய்ப்பிக்கும் வண்ணம் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க மைக்கேல் கில்வாரி என்ற அமெரிக்கர் ஒருவர் போக்கா ராட்டோன் (Boca Raton) என்ற இடத்திலுள்ள கார் விற்பனையகத்திற்கு வருகை தந்தார். இங்கு 150 ஆயிரம் டாலர் மதிப்புடைய மாஸரெட்டி கிரேன் டிரிஸ்மோ (Maserati GranTurismo) என்ற விலைமதிப்புமிகு காரை சோதனை ஓட்டம் (Test Ride) செய்ய விரும்பியதை தொடர்ந்து வழமைபோல் விற்பனையாளர் ஒருவருடன் சோதனை ஓட்டம் செய்து பார்க்க அனுமதிக்கப்பட்டார்.

ஒரு கப்பற்தள (Marina) வேலட் வாகன நிறுத்துமிடத்தில் (Valet Parking) காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர், அங்கு தனது பெண் நண்பரை அழைத்து புதிய காரை அவரிடம் காட்ட வேண்டும் சிறிது நேரம் இங்கேயே காத்திருங்கள் என்று விற்பனை பிரதிநிதியிடம் கூறி சென்றவர் பின்பு அங்கு திரும்பவே இல்லை. 30 நிமிட காத்திருப்புக்குப் பின் வேலட் வாகன நிறுத்துமிட பொறுப்பாளர்களிடம் விசாரித்த போது தான் தெரிந்தது ஆசாமி காருடன் கம்பி நீட்டிய விபரம்.

காவல்துறையின் 24 மணிநேர தேடுதல் வேட்டைக்குப்பின் கார் திருட்டு ஆசாமி சிக்கினாலும் இன்னும் காரை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

வடிவேல் என்கிற தமிழ் சினிமா காமெடியனின் காட்சிகள் பல அரசியல் முதல் பல தளங்களிலும் சகட்டுமேனிக்கு அரங்கேறி வந்தாலும் சர்வதேச அளவிலும் தற்போது அரங்கேறியுள்ளது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...