Pages

Tuesday, February 7, 2017

16 ஆண்டுகளுக்கு முன் உறைய வைக்கப்பட்ட கருமுட்டையிலிருந்து குழந்தை! சீனாவில் மருத்துவ அற்புதம்!!

அதிரை நியூஸ்: பிப்-07
சீனாவில் கடுமையாக பின்பற்றப்பட்ட ஒரு குழந்தை சட்டத்தால் முதியவர்கள் பெருகியதுடன், பெண்களுக்கு மணமகன்கள் கிடைக்காத நிலையுடன் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை போன்ற பல பிரச்சனைகளுடன் சீன அரசு செயல்வடிவில் வசமாக சிக்கியதை தொடர்ந்து கடந்த 2016 ஜனவரி 1 முதல் 2வது குழந்தையை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியது.

இந்நிலையில், சீனாவில் பல பெண்கள் குறிப்பாக மாத சுழற்சி நின்றுபோன பெண்கள் கூட 2வது குழந்தையை பெற்றுக் கொள்ள ஆர்வம்காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் 2000 ஆம் ஆண்டு கருத்தரித்த தனது 18 கருமுட்டைகளை ஆராய்ச்சி காரணங்களுக்காக குவாங்டோங் மாகாணத்தின் (Guangdong Province) சன் யாட்-சென் பல்கலைக்கழக (Sun Yat-sen University - First Affiliated Hospital) மருத்துவமனைக்கு வழங்கியிருந்தார் இன்று 46 வயதை பூர்த்தியடைந்துள்ள பெண்ணொருவர்.

இந்தப் பெண் எற்கனவே தான் 2000 ஆம் ஆண்டு வழங்கியிருந்த கருமுட்டையிலிருந்து தனது முதலாவது ஆண் குழந்தையை ஈன்றிருந்தார். தற்போதும் அதே 2000 ஆம் ஆண்டில் உறைய வைக்கப்பட்ட (Frozen Embryo) தனது 18 கருக்களில் ஒன்றிலிருந்து மற்றொரு ஆண் குழந்தையையும் சுமார் வருடங்களுக்குப் பின்  In vitro fertilisation - IVF எனும் மருத்துவத்துறையின் புதிய இனப்பெருக்க உதவி தொழிற்நுட்ப (assisted reproductive technology) அடிப்படையில்; பெற்றெடுத்துள்ளார். அதாவது 16 வருட இடைவெளி கொண்ட இரட்டை குழந்தைகள்?!!

மாத விலக்கு சுழற்சி நின்று போயிருந்த நிலையிலும், உடம்பில் நீரிழிவு, கர்ப்பகால நீரிழிவு, தாலசிமீயா என்ற இரத்தக் கோளாறு போன்ற பல்வேறு நோய்களை சுமந்தநிலையில் மீண்டும் கருவுற விரும்பினார் என்றாலும் ஆரம்பத்தில் தயங்கிய மருத்துவர்கள் பின்பு வெற்றிகரமாக உறைந்த கருமுட்டையை உயிர்ப்பித்து அத்தாயின் கருவறையில் வளர்த்தன் விளைவாக ஆரோக்கியமான, 8 கிலோ எடையுடைய இன்னொரு ஆண் குழந்தைக்கும் வெற்றிகரமாக தாயாகியுள்ளார்.

சுமார் 40 வயதுக்கு மேற்பட்ட 1000ல் ஒரு பெண் மீண்டும் கருத்தரிக்க மருத்துவமனைகளை நாடுவதாக சீன மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த மருத்துவமனை 1994 ஆம் ஆண்டு முதல் கருமுட்டைகளை சேகரித்து வந்தாலும் 16 வருடங்கள் என்ற நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு பெண்ணை கர்ப்பமுறச் செய்து பிள்ளையை பெற்றுக் கொள்ள உதவியது உலகில் இதுவே முதன்முறை என தெரிவித்துள்ளது.

Source: South China Morning Post
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...