Pages

Sunday, February 5, 2017

துபாயில் 2016 ஆம் ஆண்டு நடந்த பைக் விபத்துகள் - ஒரு சிறப்பு பார்வை !

அதிரை நியூஸ்: பிப்-05
'நாம் மற்றவர்கள் மீது மோதினாலும் அல்லது மற்றவர்கள் நம் மீது மோதினாலும் இழப்பு நமக்குத் தான்' என இந்தியாவில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் சொல்வோமல்லவா அந்த வசனம் அப்படியே துபையில் பைக் ஒட்டுனர்களுக்கும் பொருந்தும்.

துபையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்துக்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 122 பைக் விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 137 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் 16 வயது முதல் 25 வயதுடைய இளைஞர்களே அதிகம்.

மேலும் 2015 ஆம் ஆண்டு பைக் விபத்தில் 10 பேர் மட்டுமே பலியாகியுள்ள நிலையில் 2016 ஆம் ஆண்டு பலி எண்ணிக்கை 17 ஆகவும் உயர்ந்துள்ளது. இவர்களில் பலர் உணவகங்களில் பணிபுரியும் டெலிவரி பைக் ஓட்டுனர்களே.

பொதுவாக, பைக் விபத்துக்கள் அதிக வேகம், பைக்குகளுக்கென்று சீட் பெல்ட் இல்லாமை, பலர் முறையாக ஹெல்மெட் அணியாததுடன் பிரதான காரணமாக போக்குவரத்து சட்டதிட்டங்களை அறியாமல் நெரிசல் மிகுந்த வாகன போக்குவரத்தின் குறுக்கு நெடுக்காக பைக்கை வெட்டி ஓட்டிச் செல்வது போன்றவையே என்றாலும் கார் ஓட்டுனர்களின் வழி கொடுக்காத ஒருவகை திமிரான மனப்பான்மையே காரணம் என பைக் ஓட்டுனர்களும் பதிலுக்கு குற்றம் சாட்டுகின்றனர்.

உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தங்களின் பைக் ஓட்டுனர்களுக்கு தேவையான போக்குவரத்து விதிகள் பற்றிய பயிற்சிகளை கற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என மேற்காணும் புள்ளிவிபரங்களை வெளியிட்டு துபை போலீஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...