Pages

Tuesday, February 7, 2017

துபாயில் 21 மாதங்களுக்குப் பின் கோமாவிலிருந்து நினைவு திரும்பிய பெண் !

அதிரை நியூஸ்: பிப்-07
பொதுவாக கோமாவில் வீழ்ந்தவர்களுக்கு மீண்டும் நினைவு திரும்புவது அபூர்வ நிகழ்வாகும். துபையில் ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவரும் 2 குழந்தைகளுக்கு தாயுமான 35 வயதுடைய பெண் பெர்லைட் அல்மோன்டே (Perlite Almonte) என்பவர் துபை அரசின் அல் ராஷித் மருத்துவமனை மருத்துவர்களின் தீவிர தொடர் சிகிச்சைக்குப் பின் பூரண நினைவு திரும்பியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மயங்கி விழுந்து கோமா நிலையை அடைந்த இந்த பிலிப்பினாவுக்கு டாக்டர் ஜியாத் அல் ரைஸ் தலைமையிலான குழுவினர் சிறப்பு சிகிச்சையளித்து வந்தனர். கடந்த 2017 ஜனவரி மாதம் நினைவு திரும்பியவர் மேலும் சில நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு முற்றிலும் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தீவிர மறுவாழ்வு சிகிச்சை (Intensive Rehabilitation) மற்றும் ஆலோசணை பிரிவில் வைக்கப்பட்டுள்ள 'பெர்லி' விரைவில் நாடு திரும்பவும் தனது குழந்தைகளை காணவும் ஆவலாக உள்ளதாகவும் தனக்கு சிறப்பான சிகிச்சையளித்து கவனித்துக் கொண்ட அல் ராஷித் மருத்துவமனை மற்றும் மருத்துவக் குழுவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...