Pages

Tuesday, February 21, 2017

அதிரை அரசு மருத்துவமனை ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம்: எம்.எல்.ஏ சி.வி சேகர் தகவல் !

அதிராம்பட்டினம், பிப்-21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சி.வி சேகர் செவ்வாய்க்கிழமை காலை திடீர் ஆய்வை மேற்கொண்டார்.

பிரசவம் மற்றும் குழந்தைகள் வார்டு, பரிசோதனைக்கூடம், அறுவை சிகிச்சை அரங்கம் போன்ற அனைத்து பகுதிகளுக்கும் சென்றார். மருத்துவனையின் வெளிப்புற சுகாதாரம் மற்றும் பராமரிப்பு போன்றவற்றையும் பார்வையிட்டார். உள்நோயாளிகளின் அறை, படுக்கை மற்றும் கழிப்பிட வசதி குறித்தும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அதிரை அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்ணுக்கு முதல்–அமைச்சரின் ‘அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம்’ வழங்கினார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ சி.வி சேகர் கூறுகையில்;
பொதுமக்களின் வசதிக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில்
எக்ஸ்ரே, ஸ்கேனிங் வசதி, பரிசோதனைக்கூடம், அறுவை சிகிச்சை அரங்கம், உள்நோயாளிப்பிரிவு என அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் இருக்கும் வகையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். வரும் நிதியாண்டில் அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கிறோம். இத்திட்டம் நிறைவேற உறுதுணையாக இருக்கும் தமிழக அரசிற்கும், எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இப்பகுதி ஈசிஆர் சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு, இம்மருத்துவமனையில் 'தீவிர சிகிச்சைப் பிரிவு' ஏற்படுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளேன்' என்றார்.

அப்போது, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஏ.அன்பழகன், எஸ்.ஹாஜா முகைதீன், கெளசல்யா, எஸ்.கார்த்திகேயன், டி.சுதாகரன் மற்றும் அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி. சுப்பிரமணியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலர் மலை.அய்யன், அம்மா பேரவை இணைச்செயலாளர் ஆதிராஜாராம், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் முருகானந்தம், அதிரை பேரூர் செயலர் ஏ. பிச்சை, தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சேதுராமன், குழந்தை செல்வம், துணைச்செயலர் முகமது தமீம், முன்னாள் கவுன்சிலர் உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...