Pages

Thursday, February 23, 2017

27 ஆண்டுகளாக ஒருவர் கூட பயணிக்காத பயணிகள் விமானம் !

அதிரை நியூஸ்: பிப்-23
வரும் ஆனா வராது, இருக்கு ஆனா இல்லை என்பன போன்ற வசனங்களுடன் முற்றிலும் ஒத்துப்போகும் இவ்விமான நிறுவனம்.

1989 ஆம் ஆண்டு முறைப்படி பதிவு செய்யப்பட்டு இகோர் டிமிட்ரியோவ்ஸ்கி என்பவரால் நியூயார்க் நகரின் ஜான் எப் கென்னடி விமான நிலையத்தை மையமாக கொண்டு 'பால்டியா' (Baltia) எனும் விமான சேவை நிறுவனம் துவங்கப்பட்டு கடந்த 27 வருடங்களாக 'நிறுவனம்' மட்டும் ஒரே ஒரு சொந்த விமானத்துடன் இயங்கி வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்கில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு இடைநில்லா 'நான் ஸ்டாப்' (Non Stop Service) சேவை, சிறப்பு பேக்கேஜ் திட்டங்கள், அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கான சலுகைகள், வரவேற்பு சேவைகள் போன்ற பல கவர்ச்சிகர திட்டங்களுடன் பலரிடமும் பங்கு திரட்டப்பட்டு ஆரம்பம் செய்யப்பட்டது ஆனாலும் கடந்த 27 வருடங்களாக ஒரு பயணியும் ஏறவும் இல்லை விமானம் பறக்கவும் இல்லை.

காரணம், இன்று வரை மறுக்கப்படும் Federal Aviation Administration (FAA) approval சான்றிதழும் தொடர்ந்து முயற்சிக்கும் நிறுவனமும் என இன்னொரு கன்னித்தீவு கதை.

கடந்த 2014 ஆம் ஆண்டு மிச்சிகனில் நடந்த விமான கண்காட்சியின் போதும் இந்த விமானம் புத்தம் புதியது போல் மெருகூட்டப்பட்டு வருகிறது 'அமெரிக்காவின் புதிய பால்டியா விமான சேவை' என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது ஆனாலும் விமானத்தின் வயதோ 37. (37 வருடங்களுக்கு முன் தயாரிக்கப்பட்ட விமானம்)

விமானம் தனது சேவையை துவக்காமல் நிறுவனம் மட்டும் இயங்கி வருவதால் எற்பட்ட ஏகப்பட்ட கடன் மற்றும் பங்குதாரர்களுக்கு தர வேண்டிய கடன் என விமானமும் கடனிலேயே முழ்கிவிட அதன் ஸ்தாபகர் இகோர் டிமிட்ரியோவ்ஸ்கியும் தனது கனவு விமானம் பறக்குமுன்னே கடந்த 2016 வருடம் கண்களை மூடிவிட தற்போதுள்ள நிர்வாகிகளோ நாங்கள் புதிய விமானங்களை வாடகைக்கு எடுத்தாவது எப்படியும் விமான சேவையை துவங்கி விடுவோம் என அசல்டாக கூறுகின்றனர், நம்பிக்கை தானே வாழ்க்கை என்பதன் அர்த்தம் இது தானோ?

இந்த விமான நிறுவனம் இன்னும் ஒரு டிக்கெட்டை கூட விற்க துவங்காத நிலையிலும் பயணிகளுக்கான பலவகையான சலுகைகளை தனது இணையதளத்தில் வாரி வழங்கியுள்ளது. நல்ல நெஞ்சழுத்தம் தான், ஆகட்டும் பறப்பதை பார்க்கலாம்!

Source: mailonline
தமிழில்: நம்ம ஊரான் 

1 comment:

  1. வீட்டுக்கும் நாட்டுக்கும் ரொம்ப முக்கிய செய்தி; இதைப்படித்தால் தான் குரூப் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்க முடியும் . உலகச்செய்திகளை உடனுக்குடன் வாங்குறீங்க..இல்ல சொல்லுறீங்க. ரொம்ப நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...