Pages

Sunday, February 12, 2017

2 ஆம் உலகப் போரில் ஹிட்லரின் ஜெர்மனிக்கு எதிராக போராடிய முஸ்லீம் இளவரசி!

அதிரை நியூஸ்: பிப்-12
பொதுவாக இளவரசிகள் நம் மனக்கண்ணில் மென்மையான அழகிகளாகவே வந்து போவர் ஆனால் இந்த இந்திய வம்சாவளி இளவரசி ஒருவர் முஸ்லீமாக, அகதியாக, ராணுவ ரேடியோ ஒருங்கிணைப்பாளராக, கொரில்லா போர் வீரராக, குண்டுகள் தயாரிப்பவராக, ராணுவத்திற்காக நாசவேலைகள் மற்றும் இரகசியத் தொடர்புகளை ஒருங்கிணைப்பவர், போர்க்கள வீராங்கணை (War Hero) என போர் நிறைவுக்குப்பின் (மரணத்திற்குப்பின்) விருது வழங்கி போற்றப்பட்டவர் என பன்முகத்துடன் திகழ்ந்து தனக்கு இளமையில் அடைக்கலம் தந்த நாட்டின் விடுதலைக்காக போராடி சுட்டு கொல்லப்படும் போதும் 'விடுதலை' (Liberte) என்ற முழக்கத்துடன் தனது இறுதி மூச்சை நிறுத்தியுள்ளார். இத்தனை சாதனைகளும் அவரது 20வது வயது முதல் 30 வயதிற்குள்ளே நடந்து முடிந்துள்ளன, வீர மரணம் உட்பட.

இளவரசி நூர் தந்தை இனாயத் கான் (Noor Inayat Khan) வழியில் மைசூர் சுல்தான் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நெருங்கிய இரத்த உறவு முன்னோர்களாக (Ancestor) திகழ்கின்றனர்.

தாய் அமெரிக்கா குடியுரிமை பெற்ற மெக்ஸிக்கோகாரர். நூர் பிறந்தது 1914 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் பின்பு இளமையில் புலம்பெயர்ந்து வளர்ந்தது பிரான்ஸ் நாட்டில் எனினும் ஹிட்லரின் ஜெர்மானியாப்படை பிரான்ஸை கைப்பற்றிய பின் அகதியாய் அடைக்கலமானது பிரிட்டனில்.

இங்கு பிரிட்டன் ராணுவத்தில் ரகசிய உளவாளியாக பணியாற்றி, சக உளவுத்தோழியின் துரோகத்தால் பிடிபட்டு ஜெர்மனி நாஸிப் படையால் 1943 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டு, பிரான்ஸ் விடுதலைக்காக உயிர்நீத்தவர்களின் பட்டியலில் இடம்பிடித்தார்.

1940 ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களால் பிரிட்டன் பெண்கள் ராணுவ துணை விமானப்படைக்காக (Women’s Auxiliary Air Force) ரகசிய உளவாளியாக தேர்வு செய்யப்பட்டு ஜெர்மனியின் பிடியிலிருந்த பிரான்ஸ் நாட்டிற்கு ராணுவ ரேடியோ ஒருங்கிணைப்பாளராக அனுப்பப்பட்டார். அங்கு ஜெர்மனிக்காக பணியாற்றி வந்த உளவாளியும் ரேடியோ அலைகளை வழிமறித்துக்கேட்டு அவை எங்கிருந்து ஒளிபரப்பப்படுகின்றன என அதன் இடங்களை துல்லியமாக கண்டுபிடிப்பதில் வல்லுனருமான 'கெஸ்டேபோ'வின் (Gestapo) கண்களில் மண்ணை தூவிவிட்டு வெற்றிகரமாக தனது ரேடியோ ஒருங்கிணைப்பு சேவைகளை பிரான்ஸ் மண்ணுக்குள் இருந்து செய்து வந்தார்.

இந்நிலையில், அழகிய தோற்றம் கொண்ட நூர் இனாயத் கானை எவரும் விரும்புவது இயல்பே. அழகே அவரது தோழிகளின் பொறமைக்கும் காரணமானது. விளைவு, தோழியால் காட்டிக்கொடுக்கப்பட்டும் திமிறிய நூரை பிடிக்க 6 தடியர்கள் (6 Burly Men) தேவைப்பட்டனராம். மேலும் இருமுறை சித்திரவதை முகாம்களிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் தோல்வியை தழுவினார்.

சிறைபட்டு சித்திரவதை முகாம்களில் கஷ்டப்பட்டாலும் நூர் தனது உண்மையான பெயரையோ, தன்னுடன் பணிபுரிந்த சக உளவாளிகளையோ காட்டிக் கொடுக்காததுடன் கடைசி வரை தன்னுடைய உண்மையான பெயரைக்கூட வெளியிடவில்லை. மேலும், ஜெர்மானிய ராணுவத்திற்கு அவர் ஒரு இந்தியர் என்ற உண்மையை கடைசிவரை தெரிவிக்கவேயில்லை.

தற்போது ஐரோப்பா முழுவதும் புதிய பாஸிஸ்ட்டுகள் குறிப்பாக அகதிகளுக்கு எதிராக உருவாகிவரும் நிலையில் ஹிட்லரின் பாஸிஸத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த நூர் இனாயத் கான் போன்ற வீராங்கணைகளின் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம் என இளவரசி நூர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “Spy Princess: The Life of Noor Inayat Khan”என்ற தலைப்பில் எழுதியுள்ள ஷ்ரபானி பாஸூ (Shrabani Basu) அவர்கள் தெரிவித்துள்ளார்.

கூடுதல் வரலாற்று குறிப்பு ஒன்று:
இளவரசி நூர் அவர்களின் முன்னோரான மைசூர் சுல்தான் ஹைதர் அலியையும் அவரது மைசூர் நாட்டையும், பிரிட்டனின் ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவில் 18 ஆம் நூற்றாண்டில் போராடி வந்த அன்றைய அமெரிக்கா ராணுவம் தனது நெருங்கிய ராணுவ கூட்டாளியாக அறிவித்திருந்ததுடன் பென்ஸில்வேனிய மாகாணம் தனது 18 பீரங்கிகள் (18 Gun Ship) பொருத்தப்பட்ட கடற்படை கப்பல் ஒன்றுக்கு ஹைதர் அலியின் பெயரை சூட்டி நன்றி தெரிவித்தது.

Sources: PRI / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...