Pages

Saturday, February 4, 2017

சவூதியில் முதன்முதலாக 3 பெண்களுக்கு நடமாடும் உணவகம் நடத்த அனுமதி !

அதிரை நியூஸ்: பிப்-04
சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் 3 சகோதரிகள் இணைந்து நேரடியாக நடமாடும் உணவகம் ஒன்றினை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பெண்களின் குடும்பத்தின் வருமான நிலையை கருத்திற் கொண்டு இச்சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சகோதரிகள் இருவர் இன்டீரியர் டிசைனிங் மற்றும் நர்ஸிங் படித்தும் தகுந்த வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர்.

வாகனத்தில் உணவகம் நடத்தும் இவர்கள், ஜித்தா நகரின் 'ராபீஹ்' (Rabigh) பிரதேசத்தில் அமைந்துள்ள கிங் அப்துல்லா எகனாமிக் சிட்டியில் 34 அரசு அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களும் நிறைந்த 'அல் ஜூமான் கடைத்தெரு' (Souk Al Juman) பகுதியில் நடமாடும் உணவகத்தை நடத்திக் கொள்ளலாம் என்றாலும் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு இடங்களுக்கு வாகனத்தை நகர்த்தி செல்லக்கூடாது, பள்ளிக்கூடங்களின் முன்பாக கடை போடக்கூடாது, அடர்ந்த வசிப்பிடங்கள் மற்றும் குப்பைகள் நிறைந்த பகுதிகளிலும், புழுதி பறக்கும் மண்சாலை பகுதிகளிலும் வியாபாரம் செய்யக்கூடாது, 18 வயது நிரம்பியவராகவும் சுகாதார துறையிடம் உடல்நல பரிசோதனை செய்து தொற்றுநோய் இல்லாதவர் என சான்று பெற்றவராகவும் இருத்தல் வேண்டும் எனவும் விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் வார இறுதி நாட்களான வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் 'உப்ஹோர்' (Ubhor) பகுதியில் நடமாடும் உணவகங்களை நடத்திக் கொள்ளவும். மேலும் 24 பேருக்கு அனுமதியளிக்கப்படவும் உள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...