Pages

Sunday, February 5, 2017

அமீரகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு பலத்த காற்று வீசும் !

அதிரை நியூஸ்: பிப்-05
அமீரக தேசிய வானிலை மையம் அறிவித்துள்ள முன்னறிவிப்பின்படி, நாளை (திங்கட்கிழமை) காலையும் மறுநாளும் (செவ்வாய்கிழமை) பனிமூட்டம் காணப்படுவதுடன் தட்பவெப்பம் ஈரப்பதத்துடன் காணப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது.

மணிக்கு சுமார் 32 கி.மீ வேகத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு குளிர் காற்று வீசும். கடலோரப் பகுதிகளில் சீதோஷ்ணநிலை 11 டிகிரியிலிருந்து 21 டிகிரி செல்சியஸூம், நகரப் பகுதிகளில் 7 முதல் 23 டிகிரி செல்சியஸூம், மலைப்பிராந்தியங்களில் 15 டிகிரி முதல் -3 டிகிரி வரையும் இருக்கும். அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடற்பகுதிகள் சீற்றத்துடன் காணப்படும்.

அமீரகம் சில நாட்களாக கண்டுவரும் பலத்த காற்று, குளிர், புழுதிப்புயல், மழை, ஐஸ் மழை போன்றவற்றை ஆங்காங்கே மீண்டும் சந்திக்க நேரிடலாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...