Pages

Saturday, February 4, 2017

துபாயில் கிரேன் முறிந்து விழுந்தது 4 கார்கள் சேதம் !

அதிரை நியூஸ்: பிப்-04
துபையில் மிகவும் பரபரப்பான சாலையான ஷேக் ஜாயித் ரோடு அருகே கட்டுமானப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கிரேன் ஒன்று நேற்று அடித்த கடும் சூறாவளி காற்றை தாக்குப் பிடிக்காமல் முறிந்து விழுந்தது என்றாலும் நேற்று வெள்ளிக்கிழமை என்பதாலும் போக்குவரத்து மந்தமாக இருந்ததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கிரேன் முறிந்து விழுந்ததை தொடர்ந்து கீழே நிறுத்தப்பட்டு விபத்தில் சிக்கிய 4 கார்களில் 2 தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தன. பயணிகளின் பாதுகாப்பு கருதி மெட்ரோ சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன் மெட்ரோ பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன, மேலும் ஷேக் ஜாயித் ரோட்டின் அபுதாபி செல்லும் சாலையிலும் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.

Sources: Emirates 247 & Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...