Pages

Tuesday, February 7, 2017

அதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் துப்புரவு பணியாளர்கள் 40 பேருக்கு போர்வை !

அதிராம்பட்டினம், பிப்-07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் கொட்டும் பனியில் குளிரில் பணியாற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் 40 பேருக்கு இலவசமாக போர்வை செவ்வாய்க்கிழமை இரவு வழங்கப்பட்டது.

அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கத்தலைவர் எஸ்.ஏ.சி இர்பான் சேக் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்கச் செயலர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் சாகுல் ஹமீது, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் விவேகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

லயன்ஸ் சங்க மண்டலச்செயலர் பேராசிரியர் செய்யது அகமது கபீர் கலந்துகொண்டு கொட்டும் பனியில் குளிரில் பணியாற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் 40 பேருக்கு போர்வை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி அலுவலக உதவியாளர் ரவிசங்கர்
லயன்ஸ் சங்க உறுப்பினர் அதிரை மைதீன், கிரசண்ட் பிளட் டோனர்ஸ் சேவை அமைப்பு அதிரை செயலர் ஹாஜா முகைதீன், சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்க செயலர் முஹம்மது சலீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...