Pages

Wednesday, February 22, 2017

உலகின் மிகச்சிறிய அறியவகை தவளை இனங்கள் கண்டுபிடிப்பு !

அதிரை நியூஸ்: பிப்-22
தவளைகள் பற்றி அறியுமுன் கலிவர்ஸ் டிராவல்ஸ் (Gulliver's Travels) என்ற உலகப்புகழ் பெற்ற கற்பனை கதையை பற்றி ஒரு சில வரிகள்: 1726 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி ஐரீஷ் எழுத்தாளர் ஜோனதன் ஸ்விப்ட் என்பவரால் 4 தொகுதிகளாக எழுதி வெளியிடப்பட்டது. 1735 ஆம் ஆண்டு இந்தக் கதையில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டன.

முதலாவது தொகுதியில், இக்கதையின் நாயகன் கலிவர் என்ற கப்பல் மாலுமி மிகச்சிறிய குள்ள மனிதர்கள் வாழும் லில்லிபுட் (Lilliput) எனும் தீவில் கரை ஒதுங்கி, குள்ள மனிதர்களிடம் படும்பாட்டை நகைச்சுவையாக கூறப்பட்டிருப்பதை நம்முடைய பள்ளிக்கூட நாட்களில் படித்திருப்போம் அல்லவா, ஆம் என்றால் அதே நினைவுகளுடன் இந்த தவளைப் பற்றிய பதிவுக்குள் சென்றால் விஷயத்தை உள்ளுணர்ந்து கொள்ள எளிதாக இருக்கலாம்.

அதாவது கலிவர் சைஸ் தவளைகளே பார்த்து வந்த நமக்கு லில்லிபுட் மக்கள் சைஸ் தவளைகள் பற்றிய செய்தி இது.

இனி தவளைகள்...
பெரும்பகுதி கேரளாவை தமிழகம் மற்றும் கர்னாடகா மாநிலங்களுடன் இணைக்கும் முக்கிய மலைத்தொடரே 'மேற்குத் தொடர்ச்சி மலைகள்' (Western Ghats) என அழைக்கப்படுகின்றன, சுருக்கமாக சொல்வதென்றால் சந்தனமர கடத்தல் புகழ் வீரப்பன் ஒளிந்து ஓடி விளையாட்டுக் காட்டிய காடு.

இந்த ஆள் நடமாட்டமில்லாத காட்டின் கேரளப்பகுதியில் அகஸ்தியமலா என்கிற பகுதியில் டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 5 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக சுமார் 70 முதல் 80 மில்லியன் ஆண்டுகளாக அங்கு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் 7 வகை சிறிய தவளை இனங்களை, அதிலும் குறிப்பாக 4 வகை மைக்ரோ சைஸ் தவளை இனங்களை கண்டறிந்துள்ளனர். இவை அனைத்தும் இரவுத் தவளைகள் (Night Frogs) என்றும் Nyctibatrachus என்ற அறிவியல் பெயராலும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக தவளைகளின் சராசரி நீளம் 77 மில்லி மீட்டர். அதிலும் 18 மி.மீ நீளத் தவளைகளே இதுவரை உலகின் சிறிய தவளைகளாக கருதப்பட்டுவந்தன. இந்நிலையில் சராசரியாக 12.2 மி.மீ முதல் 13.1 மி.மீ நீளமேயுள்ள புதிய இனங்கள் கேரள வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் முந்தைய ரெக்கார்டுகள் முறியடிக்கப்பட்டுள்ளது. அதாவது நன்கு வளர்ந்த இதில் ஒரு தவளையின் நீளம் உங்களுடைய கைவிரல் நகத்தின் அளவே இருக்கும். காட்டில் உதிர்ந்து விழும் இலை, தழை குப்பைகளுக்கிடையில் ஒளிந்து வாழும் தன்மையுடைய இவை பிற பூச்சி இனங்களைப் போல் குரல் எழுப்பும்.

இத்தவளைகளை ஆராய்ச்சியாளர்கள் சோனாலி கார்க், ரோபின் சுயேஷ், எஸ். சுகேசன் மற்றும் எஸ்.டி. பிஜூ ஆகியோர் கண்டறிந்துள்ளனர். 7 தவளைகளை பற்றிய அறிவியல் பெயர்கள் வருமாறு,

Seven new species discovered from the Western Ghats. 

A. Radcliffe's Night Frog (Nyctibatrachus radcliffei),

B. Athirappilly Night Frog (Nyctibatrachus athirappillyensis),

C. Kadalar Night Frog (Nyctibatrachus webilla),

D. Sabarimala Night Frog (Nyctibatrachus sabarimalai),

E. Vijayan's Night Frog (Nyctibatrachus pulivijayani),

F. Manalar Night Frog (Nyctibatrachus manalari),

G. Robin Moore's Night Frog. [(D-G. Size of the miniature species in comparison to the Indian five-rupee coin (24 mm diameter)].

Sources: peerj.com / sciencedaily.com
தமிழில்: நம்ம ஊரான் 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...