Pages

Thursday, February 2, 2017

துபாயில் 53 மில்லியன் திர்ஹத்திற்கு வீடு வாங்கிய இந்தியர் !

அதிரை நியூஸ்: பிப்-02
துபையில் இந்தியாவைச் சேர்ந்த பெரும் வணிகர் ஒருவர் 39,000 மொத்த சதுர அடியில் வீடு மட்டும் 24,000 சதுர அடியில் அமைந்த புத்தம்புதிய வில்லா ஒன்றை 53 மில்லியன் (14.4 மில்லியன் டாலர்) திர்ஹத்திற்கு விலைக்கு வாங்கியுள்ளார்.

கால்பந்து மைதானத்தின் அளவில் பாதிக்கு மேல் நில அளவுள்ள இந்த சொகுசு வீட்டில் 6 படுக்கை அறைகள், ஒரு நீச்சல் குளம் மற்றும் கோல்ப் மைதானம் ஒன்றும் உள்ளது என்றாலும் அமீரகத்தில் குறைந்து வரும் வேலைவாய்ப்புக்கள், சரிந்து வரும் ரியல் எஸ்டேட் வியாபாரம், நிறுவனங்களின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் என ஒருபுறம் கீழ்நோக்கி சென்று கொண்டுள்ள நிலையில் இந்த இந்தியர் பெரும் விலைக்கு வில்லாவை வாங்கியுள்ளது ரியல் எஸ்டேட் துறையினரை பேராச்சரியப்படுத்தியுள்ளது.

துபை எமிரேட்ஸ் ஹில் (Dubai Emirates Hill) பகுதியில் வாங்கப்பட்டுள்ள இந்த வில்லாவின் இந்திய உரிமையாளரைப் பற்றிய விபரங்களை அந்தரங்க வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிட மறுத்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...