Pages

Wednesday, February 15, 2017

சூரிய குடும்ப அண்டவெளியில் மேலும் 60 கோள்கள் கண்டுபிடிப்பு !

அதிரை நியூஸ்: பிப்-15
ஹெர்ட்போர்டுஷையர் பல்கலைகழகத்தை (University of Hertfordshire) சேர்ந்த டாக்டர் மிக்கோ டவ்மி (Dr. Mikko Taumi) தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகளின் குழு நம் பூமிக்கு அருகிலுள்ள சூரிய குடும்ப (Earth's Solar System) அண்டவெளியில் 60 கோள்கள் சுற்றிவருவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும், 54 கோள்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளதால் இப்புதிய கோள்களின் எண்ணிக்கை 114 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 'சூப்பர் எர்த்' என்று குறிப்பிடத்தக்க நாலாவது கோளாக அமைந்துள்ள கிரகம், பூமியை போன்றே ஆனால் பாறைகளும் கடும் சூடும் நிறைந்ததாக காணப்படுவதாலும் இதன் புவியீர்ப்பு விசையால் ஏற்படும் நீலம் மற்றும் செந்நிற ஒளிவீச்சாலும் இதற்கு 'கிளிசீ 411b' (Gliese 411b) என பெயர் சூட்டியுள்ளனர்.

1996 ஆம் ஆண்டு துவங்கிய இந்த ஆய்வுகள் கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டும், சுமார் 1600 நட்சத்திரங்களை பகுப்பாய்ந்தும் 61,000 முறை தனித்தனி கண்காணிப்பு மூலமும் மேற்காணும் தகவல்கள் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன.

கோள்கள் குறித்து அல் குர்ஆன் சத்தியமிட்டு பிரகடனப்படுத்துவது யாதெனில்,

61,000 முறை தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட தொடர்  கண்காணிப்பு

85:1. கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,  (இந்த வசனத்தில் கிரகங்கள் என அல்லாஹ் எண்ணிக்கையை குறிப்பிடாமல் பன்மையாக சுட்டியுள்ளது இத்தகைய கண்டுபிடிப்புகளையும், இனி கண்டுபிடிக்க உள்ளவற்றையும் மெய்ப்படுத்துவதை உணரலாம்)

15:16. வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம். (என்ற இந்த வசனத்திலும் கிரகங்கள் என்ற பன்மைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதும் அதன் சுற்றுப்பாதைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இன்றைய விஞ்ஞான உண்மைகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்)

Source: Press Association / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...