Pages

Saturday, February 18, 2017

ஓமனில் இயற்கை விவசாயம் செய்யும் 70 வயது பாரம்பரிய அரபு விவசாயி !

அதிரை நியூஸ், பிப்-18
அமீரகத்தின் அல்ஹஜர் மலைத்தொடரில் வருவது ஓமன் நாட்டு எல்லைக்குள் இருக்கும் ஜபல் அல் அக்தர் மலை (Jabal Al Akhdar) - Green Mountain). இம்மலையின் 3000 மீட்டர் உயரத்தில் பரம்பரையாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார் 70 வயது விவசாயி முஹமது அல் ரியாமி. இந்த வயதிலும் தனது விவசாய நிலத்தில் உழைக்க கூலிக்கு ஆள் வைக்காமல் தானே உழைத்து மாதம் 7,000 ஒமானி ரியால்கள் வருமானம் ஈட்டுகின்றார்.

முஹமது அல் ரியாமியின் தந்தையும் ஒரு விவசாயியாக இருந்ததுடன் தன் விவசாய நிலத்தை நேசிக்கவும் கற்றுக் கொடுத்து சென்றதை நினைவுகூர்வதுடன் விவசாயத்தை தனது அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் நோக்கதுடன் எஞ்னியரிங் படிக்கும் இவரது மகனுக்கும் செயல்முறையாக சொல்லித்தந்து வருவதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகனும் தனது தந்தைக்கு உதவி வருகிறார்.

கடந்த 40 வருடங்களாக தினமும் காலையில் 15 நிமிட நடைபயண தூர விவசாய நிலத்திற்கு செல்லும் முஹமது அல் ரியாமி உச்சி வேளைவரை உழைக்கிறார் பின்பு மதிய உணவுக்குப்பின் சிறிது ஒய்வு என்றானபின் மாலை 3.30 மணிமுதல் சூரியன் மறையும் வரை மீண்டும் உழைப்பு என இவரது தினசரி வாழ்க்கை தொடர்கிறது.

இவரது 20 ஏக்கர் விவசாயப் பண்ணையில், மாதுளை, அத்திப்பழம், அப்ரீகோட், பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவை இயற்கை உரத்தால் விளைகின்றன. மேலும், இந்த மலையில் மேற்காணும் பயிர்களுக்கு மேல் திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, பிளம்ஸ், பாதாம், அக்ரூட் பருப்புக்களுடன் பேரிக்காயும் பிற விவசாயிகளால் விளைவிக்கப்படுகின்றன.

ஓமானிய விவசாய அமைச்சின் கணக்கின்படி, சுமார் 77,000 ஓமானிய விவசாயிகள் ஓமன் முழுவதுமுள்ள 194,000 விவசாய பண்ணைகளை வைத்துள்ளனர். இவர்களுக்கு உதவியாக பங்களாதேஷ் நாட்டுத் தொழிலாளர்கள் பெருமளவில் வேலை செய்கின்றனர். மேலும் தேவையான விதைகள், விவசாய உபகரணங்கள் மற்றும் விவசாய வழிகாட்டி கையேடுகளையும் இலவசமாகவே அரசாங்கம் வழங்கி வருகிறது.

கடந்த வருடம், இயற்கை விவசாய முறைக்கு எதிராக பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்திய சுமார் 1 டஜன் விவசாயிகள் அல் பதீனா (Al Batinah) பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதை நினைவுகூறும் முஹமது அல் ரியாமி தான் ஒருபோதும் வாடிக்கையாளர்களுக்கு கேடுவிளைவிக்கும் ரசாயன உரங்களை பயன்படுத்துவதில்லை என பெருமித்துடன் தெரிவிக்கின்றார்.

மேலும், கடந்த 5 வருடங்களாக தான் டிராக்டரை உபயோகிப்பதாகவும் அதற்கு முன் காளைகளை மட்டுமே உழுவதற்கு பயன்படுத்தியாதாகவும் இதற்கு காரணம் தனது முதிய வயதே என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு பாலைவன நாட்டில் இயற்கை விவசாயமும் அதை ஆதரிக்கும் அரசும் சாத்தியமெனில் விவசாய நாடு என சொல்லிக்கொள்ளும் நம் இந்தியாவில் விவசாயத்தை எந்த ரூபத்திலும் அழிய அனுமதிக்கலாமா?

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...