Pages

Saturday, February 18, 2017

சம்பளம் 700 திர்ஹம் தான் ஆனாலும் இவரது நேர்மைக்கு விலையே இல்லை!

அதிரை நியூஸ்: பிப்-18
அபுதாபியில் 700 திர்ஹம் எனும் அடிமட்ட சம்பளத்திற்கு 15 வருடங்களாக வேலை செய்யும் பங்களாதேஷ் தொழிலாளர் ஒருவர் தனது விலைமதிக்க முடியாத நேர்மையால் அனைவரின் உள்ளத்திலும் உயர்ந்து நிற்கின்றார்.

3 குழந்தைகளுக்கு தந்தையான 42 வயது பராமரிப்புப் பணி செய்யும் தொழிலாளி ஜாகிர் ரஹ்மான். அமீரகத் தலைநகர் அபுதாபியில் சேம்பர் ஆப் காமர்ஸ் அருகிலுள்ள கடற்கரையில் ( Corniche ) அமைந்துள்ள இருக்கையிலிருந்து (Bench) மணிப்பர்ஸ் ஒன்றை கண்டெடுக்கின்றார். எடுத்தவர் அதை தொலைத்தவர் எப்படியும் தேடிவருவார் என்ற நம்பிக்கையுடன் சுமார் 1 மணிநேரம் அங்கேயே காத்திருக்கின்றார். அவர் எதிர்பார்த்தபடியே ஒரு ஜெர்மானியர் பதட்டத்துடன் பர்ஸ் தேடி வருகிறார்.

அபுதாபியில் அரசாங்க நிறுவனமொன்றில் பணியாற்றும் ஆண்ட்ரஸ் கிரவ்ஸ் (Andreas Krause) என்ற ஜெர்மானியருக்கு தனது பர்ஸ் 'அப்படியே' திரும்பக் கிடைத்ததை சந்தோஷத்தைவிட அந்த முஸ்லீம் தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து போகின்றார். ஏனெனில் அதில் தான் அவருடைய பணம், கிரெடிட், டெபிட் கார்டுகள், அமீரக மற்றும் ஜெர்மன் டிரைவிங் லைசென்ஸ்கள், இன்ஷூரன்ஸ் கார்டு மற்றும் அவரது வேலையுடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் சிலவும் இருந்துள்ளன.

ஜாகிர் ரஹ்மானிடம் பத்திரிக்கையாளர்கள் வினவியபோது, முதலில் அந்தப் பர்ஸ் என்னுடையதில்லை என உணர்ந்ததால் 'திருப்பிக் கொடுத்த இச்செயலையே ஒரு பெரிய விஷயமாகவே கருதவில்லை' இது என்னுடைய கடமையும் கூட என சிம்பிளாக பதிலளிக்கின்றார், இஸ்லாமிய குடும்பப் பின்னனியில் வளர்ந்த இந்தத் தொழிலாளி.

இறுதியாக, பர்ஸ் கிடைக்கப்பெற்ற அந்த ஜெர்மானியர் கிரவ்ஸ் ஜாகிர் ரஹ்மானுக்கு அன்பளிப்பு வழங்கியதுடன் மீடியாக்கள் மூலமாக இச்செய்தியை வெளிப்படுத்தவும் செய்தார். மேலும், ஜாகிர் ரஹ்மான் ஒரு உண்மையான ஹீரோ என மனமுவந்து பாராட்டவும் தவறவில்லை. நாமும் நமது பிரார்த்தனைகள் மூலம் பாராட்டுவோம்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...