Pages

Tuesday, February 7, 2017

மமக 9 ஆம் ஆண்டு தொடக்க விழா: அதிரையில் 10 இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், பிப்-07
இன்று பிப்-7 மனிதநேய மக்கள் கட்சியின் 9 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்ப்பு, கொடி ஏற்றுதல், மரக்கன்று நடுதல், பெயர்ப் பலகை வைத்தல், மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மமக அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் அதிராம்பட்டினத்தில் 10 இடங்களில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

நிகழ்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட மமக செயலாளர் அதிரை அஹமது ஹாஜா தலைமை வகித்தார். தமுமுக அதிரை பேரூர் செயலர் ஏ.ஆர் சாதிக் பாட்சா, மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது, வர்த்தக அணி செயலர் காய்கறி கடை நெய்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மமக மாவட்ட பொருளாளர் டாக்டர் உமர், தமுமுக அதிரை பேரூர் முன்னாள் தலைவர் சாகுல்ஹமீது ஆகியோர் கலந்துகொண்டு அதிராம்பட்டினம் பேருந்துநிலையம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, தக்வா பள்ளி, சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை, ஷிஃபா மருத்துவமனை அருகில் உள்ளிட்ட 10 இடங்களில் கட்சி கொடியை ஏற்றி வைத்தனர்.

முன்னதாக தமுமுக/மமக அதிரை பேரூர் பொருளாளர் செய்யது முகமது புஹாரி வரவேற்றார். முடிவில் மமக துணைச் செயலர் எஸ்.எஸ் சேக்காதி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக / மமக மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...