Pages

Friday, February 10, 2017

அதிரையில் தூய்மைப் பணிகள் தீவிரம் - களப்பணியில் 90 துப்புரவு பணியாளர்கள்! 6 வாகனங்கள்!!

அதிராம்பட்டினம், பிப்-10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் பன்றி காய்ச்சலுக்கு ஒருவர் பலியானதை தொடர்ந்து பேரூராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 4-ந்தேதி அதிராம்பட்டினம் சுப்ரமணியர் கோவில் தெருவை சேர்ந்த டீ வியாபாரி நாகராஜ் (59) என்பவர் பன்றிக்காய்ச்சலால் இறந்தார். இதையடுத்து பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜி. இளங்கோவன் அறிவுறுத்தலின் பேரில், அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வார்டுகளிலும் தூய்மைப் பணிகளில் துப்பரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் தேங்கிக்காணப்படும் குப்பை கூளங்களை அப்புறப்படுத்துவது, பிளிச்சிங் பவுடர் இடுவது, கழிவு நீர் வடிகாலை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.

இப்பணிக்காக தஞ்சை மாவட்டதின் பிற பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட துப்புரவு பணியாளர்கள் 30 பேர், அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழு பணியாளர்கள் என மொத்தம் 90 பேர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 6-ந்தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பணிகள் நடைபெறுகிறது. குப்பைகளை அள்ளிச்செல்ல டிராக்டர், லாரி உட்பட மொத்தம் 6 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாளை சனிக்கிழமை வரை தூய்மை பணிகள் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...