Pages

Wednesday, February 8, 2017

92 வயதில் பெண் குழந்தைக்கு தந்தையான முதியவர் !

அதிரை நியூஸ்: பிப்-08
பாலஸ்தீன், மேற்குக்கரை (West Bank) பிரதேசத்தின் அல்கலீல் (Al khalil) என்ற பகுதியை சேர்ந்தவர் 92 வயது முதியவர் மஹ்மூது அல் ஆதம், ஏற்கனவே 7 பெண்களும் 5 ஆண்களும் வாரிசாக உள்ள நிலையில் 8 வது பெண் குழந்தைக்கு தனது 92 வது வயதில் தந்தையானார்.

முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் 42 வயதுடைய அபீர் என்ற பெண்ணை மணமுடித்தார், இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதுடன் அபீர் காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. அபீருக்கு முதல் திருமணம் மூலம் குழந்தை ஏதும் இல்லாத நிலையில் தற்போது 42 வயதை கடந்த நிலையில் குழந்தை பாக்கியம் கிடைத்திருப்பது அவருக்குப் பெரும் மகிழ்வை தந்துள்ளது.

குறிப்பு: பாலஸ்தீனம் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் வயதான காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது பண்டைய காலத்திலிருந்து இறையருளால் இயல்பான ஒன்றே, இறைத்தூதர்களான ஜக்கரியா (அலை) அவர்களும், நபி இப்ராஹீம் ( அலை ) அவர்களும், அவர்தம் மனைவிமார்களும் மிகவும் முதிய வயதை அடைந்த பின்பே குழந்தைப்பேறு கிடைக்கப் பெற்றுள்ளனர்.

உதாரணத்திற்கு, நபி ஜக்கரியா (அலை) அவர்களும் அவரது மனைவியும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்டதை பற்றி குர்ஆனில் வரும் வசனங்கள்:

19:4. (ஜகரிய்யா) கூறினார்: 'என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.

19:7. 'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை' (என்று இறைவன் கூறினான்).

19:8. (அதற்கு அவர்) 'என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?' எனக் கூறினார்.

19:9. '(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்' என்று இறைவன் கூறினான்.

Source: http://english.alarabiya.net/
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...