Pages

Sunday, February 5, 2017

ஓமானியர்களுக்கு புதிய பகுதி நேர வேலைவாய்ப்புத் திட்டம் !

அதிரை நியூஸ்: பிப்-05
ஓமன் தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையத்தின் (National Centre for Statistics and Information - NCSI) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஓமனில் மொத்தம் 1,848,175 வெளிநாட்டினர் பணிபுரிகின்றனர், இவர்களில் 1,504,936 பேர் தனியார் நிறுவனங்களிலும், அரசுத்துறைகளிலும்  60,196 பேரும், வீட்டு டிரைவர் மற்றும் வீட்டுப் பணியாளர்களாக 283,043 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ஓமானிய இளைஞர்கள் படிக்கும் காலத்திலேயே பகுதிநேர பணிபுரிந்து வருமானம் ஈட்டவும், படித்து முடித்தப்பின் தங்களுடைய பகுதிநேர வேலை அனுபவத்தின் மூலம் உடனடி வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ள ஏதுவாகவும் பகுதி நேர வேலைவாய்ப்பு சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த புதிய சட்டத்தின்படி, மாணவர்கள், இளைஞர்கள் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிக்குள் தினமும் 4 மணிநேரம் மட்டும் அல்லது வாரத்திற்கு 25 மணிநேரத்திற்கு மிகாதவாறு பகுதிநேர வேலை செய்யலாம். பகுதிநேர வேலை செய்பவர்களுக்கு மணிக்கு 3 ஓமன் ரியால்கள் சம்பளம் வழங்கப்படுவதுடன் கட்டாய மருத்துவ இன்ஷூரன்ஸூம் வழங்கப்பட வேண்டும். இந்த இளைஞர்களின் வயது வரம்பு 15 முதல் 17க்கள் இருத்தல் வேண்டும் எனவும் வழிகாட்டப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி 43,858 பேர் வேலைவாய்ப்பு மையத்தில் பெயரை பதிந்து வைத்துள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் அதாவது 20,869 பேர் 25 முதல் 29 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளாகும், இவர்களுக்கு அடுத்து 18 முதல் 24 வயதுடைய இளைஞர்களின் எண்ணிக்கை 12,700. 30 முதல் 34 வயதுள்ளவர்களின் எண்ணிக்கை 7,231 பேர் என்றும், 35 முதல் 39 வயதுடையவர்கள் 2,735 பேர்களாக உள்ள நிலையில் 40 வயது மற்றும் அதற்கும் மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 323 பேர்களாகவும் உள்ளன.

ஓமன் அரசின் 9 வது ஐந்து ஆண்டுகால திட்டத்தின்படி(Tanfeedh is a national initiative which is part of the 9th Five-Year Development Plan (2016-2020) மலேஷிய அரசின் நிறுவனத்துடன் (Performance Management and Delivery Unit - PEMANDU) இணைந்து பல்வேறு வளர்ச்சிப்பணிகளுக்கான திட்டங்களை குறிப்பாக சுற்றுலா, போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, சுரங்கம் மற்றும் மீன் வளத்துறைகளின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

இத்தகைய செய்திகளை பதிவதன் நோக்கம், உலகெங்கும் குறிப்பாக இந்தியர்கள் வேலைவாய்ப்புக்களை இழந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் டிரம்ப் அதிபர் ஆன பிறகு இந்திய தகவல் தொழிற்நுட்பத்துறைக்கு (IT sector) பலத்த அடி விழுந்துள்ளது. எனவே, நமது நாட்டு மத்திய, மாநில அரசுகளும் இதுபோல் இளைஞர் நல திட்டங்களை அக்கறையுடன் செயல்படுத்த வேண்டும் என்பதே.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...