Pages

Saturday, February 11, 2017

தஞ்சையில் சேவல் சண்டைப்போட்டி !

தஞ்சாவூர், விளார் கிராமத்தில் தமிழர் பொங்கல திருநாளை முன்னிட்டு தென் மண்டல வீர விளையாட்டு கலைச் சங்கம் சார்பில் கால்போர் சேவல் கலைப்போட்டி (வெற்றுக்கால் சேவல் சண்டை) நடைபெற்றதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (11.02.2017) பார்வையிட்டார்.

வெற்றுக்கால் சேவை சண்டையினை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் விளார் பகுதியில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை நடைபெற்று வருகின்றது.  இது நான்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, கேரளா மற்றும் தமிழகத்திலிருந்து சுமார் 850 சேவல்கள் பங்கேற்றுள்ளன.  மொத்தம் 30 களங்கள் அமைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கால்நடைத்துறை, வருவாய்த்துறை, காவல் துறையின் மூலம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  கால்நடைத்துறை மூலம் அனைத்து சேவல்களும் சோதனை உள்ளாக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகின்றது.

இவ்விளையாட்டு போட்டி இன்றும் நாளையும் என இரண்டு நாட்கள் நடைபெறும். பாரம்பரியமான இப்போட்டிகளை பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இப்போட்டியானது நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.

பின்னர் சேவல் வளர்ப்போரிடம் சேவல் வளர்க்கும் முறை குறித்தும்ää உணவளிக்கும் விதம், சேவல் சண்டைக்கு சேவல்கள் தயார் செய்யும் முறை குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் கால்நடைத்துறை இணை இயக்குநர் மாசிலாமணி, துணை இயக்குநர் ராஜசேகரன், உதவி இயக்குநர் நெடுஞ்செழியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...