Pages

Monday, February 6, 2017

பள்ளி மாணவ, மாணவிகள் பங்குபெற்ற சீமை கருவேல மரங்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி !

தஞ்சாவூர் ரயில்வே நிலையத்திலிருந்து அரண்மனை வளாகம் வரை சீமை கருவேல மரத்தை அழிக்க பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி மாணவ மாணவியர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (06.02.2017) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் கருவேல மரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக மாணவர்கள் சென்றனர். சீமை கருவேல மரம் இருக்கும் இடத்தில் மற்ற மரங்களை வளரவிடாமல் தடுக்கிறது.  மேலும், அதிக ஆழம் வரை வேர் செல்வதால், நிலத்தடி நீரை உறிஞ்சி விடுகிறது.  இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தும், வறட்சியாகவும் காணப்படுகிறது. சீமை கருவேல மரத்தை முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டால், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க முடியும்.  கேரளா மாநிலத்தில் சீமை கருவேல மரம் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது.  இதனால் அம்மாநிலம் நீர் ஆதாரம் பாதுகாக்கப்பட்டு வளமான பசுமையான மாநிலமாக உள்ளது. அதே போன்று  நமது மாநிலத்திலும் சீமை கருவேல மரத்தை முற்றிலுமாக அழிக்க பொது மக்களே முன் வந்து தங்களது நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.  கடந்த ஒரு வார காலமாக மாவட்டத்தில் சீமை கருவேல மரம் அகற்றப்பட்டு வருவதை அந்தந்த பகுதி வருவாய்த்துறையினர், பொதுப் பணித்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர் போன்ற பல்வேறு துறையினர் கண்காணித்தும், அகற்றப்பட்டும் வருகின்றனர்.   பொது மக்களிடம் சீமை கருவேலம் தீமைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பள்ளி கல்லூரி மாணவர்களை கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இன்று தஞ்சாவூரில் ரயிலடியில் தொடங்கி பேரணி முக்கிய வீதிகளில் வழியாக அரண்மனை வரை சென்றது.

இப்பேரணியில் கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி, கமலா சுப்ரமணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசர் மேல்நிலைப்பள்ளி, பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி, தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, பிளேக் மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம் அரசு மகளிர் மேல்நிலைபள்ளி, அரசர் மேல்நிலைப்பள்ளி மற்றும் என்.எஸ்.எஸ். மாணவ மாணவியர்கள், சாரண சாரணீயர் இயக்கம் ஆக 750க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டு சீமை கருவேலத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்டுத்தினர்.

இப்பேரணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. திருவளர்செல்வி, பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...