Pages

Thursday, February 2, 2017

என்.சி.சி சார்பில் காதிர் முகைதீன் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா !

அதிராம்பட்டினம், பிப்-02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை ( என்சிசி ) சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா காதிர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகைதீன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கல்லூரி வளாகத்தில் புதிதாக மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளை பாதுகாக்க கூண்டுகள் வைக்கப்பட்டன.

முகாம் ஏற்பாட்டினை காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் மேஜர் பி. கணபதி, காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை பொறுப்பாளர் முனைவர் ஆ. அஜ்முதீன் ஆகியோர் செய்தனர். இதில் கல்லூரி மற்றும் பள்ளி தேசிய மாணவர் படை வீரர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...