Pages

Wednesday, February 8, 2017

மும்பையில் பாம்பு ஆர்வலர் பாம்பு கடித்து மரணம் !

அதிரை நியூஸ்:பிப்-08
மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையின் பெலாப்பூரைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சோம்நாத் மாத்ரே, பாம்புகளை பிடித்து பாதுகாப்பான பகுதியில் கொண்டுவிடும் பாம்பு ஆர்வலர். இவர் இதுவரை 100க்கு மேற்பட்ட பாம்புகளை பிடித்து காப்பாற்றியுள்ளார்.

இந்நிலையில் பெலாப்பூரில் காருக்குள் புகுந்த நாகப்பாம்பு ஒன்றை பிடித்து அப்புறப்படுத்த அழைக்கப்பட்டார், அவரும் வெற்றிகரமாக பாம்பை காரிலிருந்தும் அகற்றினார் ஆனாலும் அதன் பின் தான் தீராத சோகம் ஏற்பட்டது.

பிடித்த பாம்பின் கவனத்தை திசைதிருப்பி அதன் தலையின் மீது முத்தமிட்டு சாகசம் செய்வதும் போட்டோ எடுத்துக் கொள்வதும் பொதுவாக பாம்பு ஆர்வலர்களின் பொழுதுபோக்கு. சோம்நாத்தும் அதன் தலையை முத்தமிட முயன்றபோது எதிர்பாராவிதமாக அவரது நெஞ்சில் பாம்பு கொத்தியதை தொடர்ந்து அவரை நவி மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Source: Mirror / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...